இலங்கை இனப்படுகொலை

417x300xlankan-tamils1.jpg.pagespeed.ic.SL83MnYTzL[1]

இலங்கை முல்லைதீவில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை தொடர்பான வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன. உயிருடன் பிடிக்கப்பட்ட புலிப்போராளிகளை கொடூரமாக சித்திரவதை செய்வது, பின்னர் அவர்களின் ஆடைகள் களையப்பட்ட உடல்களை வீடியோ எடுப்பது என சிங்கள இராணுவம் வெறியாட்டம் ஆடியுள்ளது.

சர்வதேச விசாரணையை எதிர்நோக்கும் தருணத்தில், வஞ்சக அமெரிக்காவின் சூழ்ச்சியால் முறையான நீதி கிடைக்குமா என்ற அச்சத்தில் தமிழர்கள் உள்ளனர்.

இலங்கை அரசின் மகிந்த ராஜபக்ஸவுக்கும் கோத்தபாயவிற்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர் லண்டனைச் சேர்ந்த கெலம் மக்ரே. இவரது மனதாபிமான முயற்சிகளின் பலனாக கொடூரங்கள் வெளிக்கொணரப்பட்டது. ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டது. இவற்றை பார்த்த உலக சமூகம் நம்ப மறுத்தது.

ஏனெனில் காணெளியில் காணும் காட்சிகளை இந்த நுாற்றாண்டின் மனிதர்கள் செய்யமுடியாது என நியாயப்படுத்தினர். எனினும் சர்வதேச வீடியோ ஆய்வாளர்கள் இந்த வீடியோக்கள் உண்மையானது தான் என்று கூறியுள்ளனர்.

உலக யுத்த சட்டங்களின் படி ஐ.நா அங்கத்துவ நாடுகள் தங்கள் நாடுகளீல் நடைபெறும் யுத்தங்களில் கைது செய்யப்படும் எதிர்தரப்பு உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும்.

அத்துடன் போரிடும் போது சண்டைப்பகுதியின் நான்கு பக்கங்களையும்  மூட முடியாது. எதிரணி தப்பிச்செல்வதற்கென ஒரு பக்கத்தினை திறந்ததாக விட வேண்டும். இந்நிலையில் சர்வதேச விசாரணை செய்யப்படுவதே  மிகவும் அரிதானது.

இன்னும் சில நாட்களில் ஐ.நா கூட்டத்தொடரில் அமெரிக்காவின் நிலையைப் பொறுத்தே, சர்வதேச விசாரணையா அல்லது உள்ளக விசாரணையா என முடிவுகள் எடுக்கப்படும்.

தற்போது, கெலம் மக்ரே வெளியிட்டிருக்கும் புதிய வெளியீடான நீதிக்கான தேடல் என்ற ஆவணப்படம் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளிக்க இலங்கையரசு தயாராக காலம் போதது. இதனால் மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் உள்ளது மைத்திரி அரசு.