கேலி செய்தவனை காவல் நிலையத்திற்குள் தர்மஅடி கொடுக்கும் மாணவி

girl-beats-eveteaser copy

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கேலி செய்தவனை பாதிக்கப் பட்ட மாணவி தர்மஅடி வழங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் பிலிபிட்டில் மாணவியை, இளைஞன் ஒருவன் பெண் கேலி செய்து உள்ளார். இது தொடர்பாக காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர். இளைஞருக்கு பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குகிறார். அந்த இளைஞன் சாரி, சாரி என்று கெஞ்சுகிறான். சாரியா.. என்று கோபப்படும் அந்த பெண் செருப்பை கழற்றி இளைஞன் கன்னத்தில் பளார் விடுகிறார்.

அடிதாங்காமல் இளைஞன் அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.