முதலைவாயில் உணவு உண்ணும் பறவை

download (75)

முதலை என்பது நீரில் வாழும் ராஜாவாகும். சிங்கமாக இருந்தாலும் தன் பலத்தால் பிடித்து கிழித்து எரிந்தவிடும் முதலை. ஒரே ஒரு பறவைக் முன்னால் அமைதியான சாதுபோல் இருக்கும்.  அந்தப் பறவையின் பெயர் ப்ளோவர்-(நம்ம ஊர் ஒட்டதீத்தி பறவை போன்றது).

முதலை நாள் முழுக்க விலங்குகளை அடித்து கடித்து சாப்பிடுவதால் அதன் பற்களுக்கிடையில் நிறைய புழுக்கள் மற்றும் மிஞ்சிப்போன மிருக மாமிசங்கள் நிறைந்து காணப்படும்.  இது இப்படியே போனால் முதலையின் பற்கள் சொத்தையாகி விழுந்து விடும்.  அவ்வளவு பெரிய விலங்குக்கு பற்கள் தான் பலம்.  அதுவே ஆட்டம் கண்டால் முதலையின் நிலைமை மோசமாகிவிடும்.  இதனால் முதலை தன் பற்களை சுத்தம் செய்ய டாக்டரை வைத்துள்ளது.  அதுதான ப்ளோவர்.

images (61)

அடை காக்கும் தாய் பறவை (ஆட்காட்டிப்பறவை)

பறவை வந்தவுடன் அதற்கு லாவகமாக வாயை திறந்து கொண்டு முதலை காட்டும்.  பறவை பயப்படாமல்  உள்ளே சென்று அதன் பற்களை சுத்தம் செய்யும். முதலை வாயை சுத்தம் செய்யும் வரை வாயை திறந்தே வைத்திருக்கும்.  பின் பறவை சுத்தம் செய்த மிச்ச மாமிசம் மற்றும் அதன் புழுக்களை தின்றுவிட்டு வெளியேவந்து விடும்.

இன்று வரைக்கும் இப்படித்தான் நடக்கின்றது.  பசியாக முதலை இருந்தாலும் பிளோவரை தின்னாதாம். முதலை நினைத்தால் வாயை மூடிக்கொண்டு பறவை கொல்ல முடியும். அப்படி முதலை செய்யாது.  இது போல் சுறாமீன்களும் திமிங்கலமும் தன்னை சுத்தம் செய்ய தனி சிறுமீன் கூட்டங்களை வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.