வித்தியாசமான துறவி நண்டு

hermit-crab-plastic-f1772

பொதுவாக கடற்பகுதிகளில் நிறைய உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இதில் முக்கியமான பிராணி நண்டுதான்.  கடற் நண்டு பெரியதாகவும் கூட்டம் கூட்டமாகவும் இருக்கும் இதில் மற்றொரு நண்டுவகையுண்டு இது பிறந்து வளரும் பருவத்தில் தன் கூட்டத்தை விட்டுப்பிரிந்து சென்றுவிடும் தொடர்பே வைத்துக்கொள்ளாது அதை துறவி நண்டு என்று கூறுவர்.

bcphermsnowb

துறவி நண்டு

மிகவும் புத்திசாலி நண்டு எதிரிகளை விரட்டுவதில் அதன் சாமர்த்தியத்தை பாராட்டியே வேண்டும். இந்த வகை நண்டுகள் வலைக்குள் வாழ்வதில்லை இறந்துப்போன சங்கினை தேடி எடுத்து அதனுள் தன் உடலை முழுவதுமாக நுழைத்துக்கொள்ளும்.  அந்த சங்கினை தன் பரத்யேக வால் போன்ற பகுதிகளில் பிடித்துக்கொள்ளும்.  அதில் இருந்துக்கொண்டே புழு பூச்சிகளை வேட்டையாடும். கொக்கு போன்ற தன்னை வேட்டையாடும் பறவைகள் வந்தால் உடனே சங்கினுள் நுழைந்து காப்பாற்றிக்கொள்ளும்.

இன்னும் ஒரு பழக்கம் துறவி நண்டுக்கு உண்டு.  இது கடற் தாமரையையும் கூட்டு சேர்த்துக்கொண்டு அதை சங்கில் ஒட்டிவைத்துவிடும்.  பின் பெரிய பிராணிகள் சங்கை வேட்டையாட வந்தால் கடற் தாமரை அசைந்து ஆடும்.  உடனே அந்தப் பிராணிகள் பயந்தோடும். சங்கில் உள்ள நண்டு சாப்பிடும் புழுக்கள் பூச்சிகளை கடற்தாமரைக்கும் தரும்.  இப்படி ஒன்றுக்கொண்டு உதவி செய்து கொண்டு வித்தியாசமாக வாழ்கின்றன.download (74)

இதன் தலையில் பல லென்சுகள் உள்ளன.  இவைகள் தான் இதன் கண்களாம்.துறவியாக வாழ்வதாலோ என்னவோ இந்த நண்டுகள் அதிசயித்தக்க வகையில் சுமார் 32 வருடங்கள் வரை வாழுமாம். என்னதான் அதற்கு அறிவிருந்தாலும் அது நிரந்தரமாக வலையில் வசிப்பது கிடையாது தனது வீட்டை மாற்றிக்கொண்டே இருக்கும்.  கடலில் வினோதமான விலங்குகளுக்கு பஞ்சமில்லை அதில் துறவி நண்டு வித்தியாசமானது.

Leave a Reply

Your email address will not be published.