இனி வீட்டிலேயே கேக் செய்யலாம் கவலைவேண்டாம்

homemade-cake-mix-4

கேக் சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று ஆனால் பேக்கரிகளில் மட்டுமே கேக் கிடைக்கும் ஆனால் இப்போது கேக்கை வீட்டில் செய்ய கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தலாம்.

வீட்டில் ஓவன் கூட தேவையில்லை பிரஷர் குக்கர் இருந்தால் போதுமானது.  இந்த முறையில் கேக் செய்தால் இனிமையாக இருக்கும்.

how to bake cake using pressure cooker

மணல் நிரப்பிய குக்கரில் வைக்கப்படும் பாத்திரத்தில் செய்யப்படும் கேக்

கேக் செய்யத் தேவையான பொருட்கள்

மைதா –  ஒன்றரைக்கப்

சூரியகாந்தி எண்ணெய் – 3 டீ-ஸ்பூன்

ஆப்ப சோடா – 1/2 ஸ்பூன்

பேகிங் பவுடர் – 1/2 ஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்

பால் – 1 கப்

பொடித்த சக்கரை – 1 கப்

சமையல் கலர் – 1 சிட்டிகை ( விருப்பபட்டால் )

செய்முறை

பெரிய குக்கரை எடுத்துக்கொண்டு அதில் பாதிக்கும் சிறிது குறைவாக மணலை (ஆற்று மணல்) நிரப்பிவிட வேண்டும்.  பின் ஒரு அகலமான பாத்திரத்தல் மைதாமாவு, ஆப்ப சோடாத்தூள், பேகிங் பவுடர், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை கலந்து சல்லடையில் சலித்து வைத்துக்கொள்க.

பிறகு அதில் எண்ணை, வெண்ணிலா எசென்ஸ் மற்றும் தேவையான கலர் சேர்த்துக்கொள்ளவும். பின் பாலை அதனுடன் கலந்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கிளிறிவைக்கவும்.

மாவு கட்டியாக இல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.  மாவு கட்டியாக இருந்தால் அதில் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளவும்.

இன்னொரு அலுமினியப்பாத்திரம் எடுத்துக்கொள்ளவும் அது பெரிய குக்கர் உள் வைக்கும் அளவு சிறியதாக இருக்கவேண்டும் அதே சமயம் அப்பாத்திரத்தல் கேக் மாவு பாதிதான் இருக்கவேண்டும் அப்படியென்றால் தான் கேக் நன்றாக உப்பி வரும்போது மணலில் விழாமல் இருக்கும்.    அந்த பாத்திரத்தில் சிறிதளவு எண்ணை விட்டு அதன் உட்புறத்தில் அனைத்துப்பகுதியிலும் பூசுக பின் மைதா மாவை பக்கவாட்டில் பூசவேண்டும்.  இதனால் கேக் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.

அந்தப்பாத்திரத்தில் மாவைக் கொட்டி கிண்டிவிடவும்.  பின் மணல் நிரம்பிய குக்கரை அடுப்பில் வைத்து பின் பாத்திரத்தை அதனுள் வைத்து குக்கரை மூடிவிடவேண்டும் விசில் மற்றும் கேஸ்கேடு ரப்பர் வளையம் போடவேண்டாம்.

சிறிது நேரம் கழித்து 20 நிமிடம் கழித்து வெந்து விட்டதா என சிறிய கரண்டியின் மூலம் கேக்கை குத்திப்பார்க்க கேக் ஒட்டிக்கொண்டு வந்தால் வேகவில்லை என்று அர்த்தம். கேக் ஒட்டவில்லையென்றால் வெந்துவிட்டது.  உடனே இறக்கி ஆறவைத்து பகிரவும் அருமையான வாசனை வர சிறிது ஏழக்காயை மாவில் பிசையும் போது சேர்த்துவிடவும்.

 

Leave a Reply

Your email address will not be published.