சீரகத்தின் மருத்துவ குணங்கள்

cumin

 

சீரகம் பொதுவாக உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.  சீரகத்தை எவ்வாறு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

1.வாந்தி.

சீரகத்தை கடாயில் போட்டு வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடேற்றி வைத்த கஷாயத்தை வாந்தி எடுத்தவர்களுக்கு கொடுக்க வாந்தி நி்ற்கும்.

2.செரிமானக் கோளாறு.

சீரகத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து பின்பு ஆற வைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் போய்விடும்.

3.தலைச்சுற்றல்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த நீரை குடித்தால் மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் இல்லாமல் போய்விடும்.

4.இரத்த அழுத்தம்.

திராட்சை பழச்சாறுடன் சீரகம் கலந்து பருகிவர இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

5.மனநோய்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வர மனநோய் குணமடையும்.

6.நரம்புத் தளர்ச்சி.

வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

7.குடல் நோய்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு  கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published.