தயங்காமல் சாப்பிடுங்கள் இட்லியை

idli

இட்லி (இட்டு அவி) என்பது மருவி இட்லி என்று மாறிவிட்டது.  இட்லி அனைவருக்கும் பிடித்தமான உணவுதான் கிராமப்புறத்தில் ஒரு முறை பாத்திரம் நிறைய மாவாட்டிவிட்டு அதை மூன்று நாட்கள் வைத்திருந்து முதல் நாள் இட்லி இரண்டாம் நாள் தோசை முன்றாம் நாள் புளித்த மாவைக்கொண்டு குழிப்பணியாரம் செய்து சாப்பிடுவார்கள்…. இட்லியில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து நிறைந்த காணப்படுகின்றது.

இட்லியில் உள்ள உளுந்து உடலின் உறுதிக்கு ஏற்றது தோசையை வார்க்க நெய் அல்லது எண்ணை தெளிக்கின்றார்கள் அது கொழுப்பு சத்தை தரும்.  ஆனால் இட்லி நீராவியால் வேக வைக்கப்பட்டு எடுக்கப்படுகின்றது.

உளுத்தம்பருப்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள்நிறைந்து காணப்படும் இது மாவுச்சத்துடன் கலக்கும் போது நொதிக்கப்பட்டு சத்துக்கள் இரட்டிப்பாகின்றன.

இதில் காணப்படும் இன்னொரு சத்து அமினோ அமிலம் இது நச்சு முறிக்கப்பயன்படக்கூடிய மருந்து. காலையில் தினமும் 5 இட்லிகள் சாப்பிடுவர்களுக்கு அல்சர் நோயில் இருந்து பூரண குணம் கிடைக்கும்.  இட்லி மட்டுமே உணவில் மன திருப்தியை தரக்கூடியது.  இதனால் பசியடைங்கிவிடும்.  எளிதாக செரிமானம் ஆகிவிடுகின்றது.

இதற்கு தேங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி வைக்கலாம் சிலருக்கு சாம்பார் பிடிக்கும்.  இட்லியை மட்டனோடு சேர்த்து உட்கொள்ளவேண்டாம்.  மட்டன் செரிமானமாக 2 நாட்கள் ஆகும். அதனால் அசிட்டிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டுவிடும்.

எதுவும் அளவுக்கு மீறாமல் சாப்பிடவேண்டும்.   அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.

 

Leave a Reply

Your email address will not be published.