தேள் கடித்தாள் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள்

scorpion

நம்மைச்சுற்றியுள்ள விஷப்பூச்சிகளில் பாம்புளுக்கு அடுத்தது நாம் பயப்படுவது இந்த தேளுக்குதான்.  தேள்களில் சிறுந்தேள், செந்தேள், கருந்தேள் என்று வகையுண்டு. விஷத்தில் எல்லாத் தேள்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.  தேள்கள் கல்லுக்கடியில் அல்லது குப்பையுள்ள பகுதிகளில் மறைந்து வாழக்கூடியது.  அடிப்படையில் தேள் ஒரு பலவீனமான பிராணி அதன் பலமே அதன் கொடுக்குதான் ஒரு முறை உபயோகப்படுத்தி விஷத்தை பயன்படுத்திவிட்டால் மீண்டும் விஷம் உருவாக்க நிறைய நாட்களாகும்.  தற்காப்புக்காக மட்டுமே பின் கொடுக்கில் உள்ள விஷத்தை பயன்படுத்தும்.  உணவுதேட முன் கைகளில் உள்ள கொடுக்குகளைப்பயன்படுத்தும்.

தேளில் செந்தேள் கடித்தால் அந்த இடம் முழுவதும் உடனே நீல நிறமாக மாறிவிடும். நாம் தேள்கடித்தவுடன் செய்ய வேண்டியது. கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

1. பதற்றத்தை தவிர்க்க வேண்டும்.

2. தேள் கடித்தவுடன் உடனே கடிபட்ட இடத்தில் அருகில் ரப்பர் அல்லது ரிப்பன் முலம் இறுக்கி கட்ட வேண்டும்.

3. பின் தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும்.

4. வலி அதிகமாகும் சமயத்தில் முதலில் வெங்காயத்தை நறுக்கி நன்றாக தேய்த்து விடவும்.

5. பனிக்கட்டி (ஐஸ்)  கட்டியாக எடுத்து கடிவாயில் வைத்து மறத்துப்போக செய்து விட்டால் வலி குறையும்.  அதேபோல் கருந்தேள் கடித்தால் முதலில் நெஞ்சைத்தான் தாக்கும். நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பு சோ்த்து கலக்கும் போது நீர் உருவாகும் அதை அப்படியே எடுத்து கடிவாயில் வைத்தாள் விசம் முறியும்.

6. தேள் கடித்தவுடன் விஷம் பரவாமல் செய்தவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று முதலுதவியைப் பெற்றுவிட வேண்டும்.

7. கடிபட்டவர் மயங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மயங்குவதற்குள் மருத்துவமனைக்கு சென்றுவிடவேண்டும்.

குறிப்பு-

தேள் கடித்தவர்க்கு வாழ்நாளில் இருதய அடைப்பு வருவது மிக மிக குறைவு என்கின்றது. ஆனால் தேள் கடித்தவுடன் ஏற்படும் நெஞ்சடைப்பிற்கு உயிரோடு இருக்க வேண்டும்.

 

 

Leave a Reply

Your email address will not be published.