ஆண்மைக்கு அழகு சேர்க்கும் வெண்டைக்காய்

okra-1026121

 

hqdefault (3)

வெண்டைக்காய் தக்காளி போன்ற காய்கறிகளைப்பயன்படுத்தி செய்யப்படும் எதியோப்பியாவின் காய்கறி சூப்

வெண்டைக்காய் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று அதன் பருப்புக்குழம்பை விரும்பாதவர்கள் யாருமல்லர். வெண்டைக்காயின் பூர்வீகம் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாதான் அங்கு மக்கள் காய்கறி சூப்பின்போது கெட்டித்தன்மைக்காக வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சூப்பின்போது கடைசியாக சேர்த்துவிடுவர்.

இதனால் சூப் மிக ருசியாகவும் கொழ கொழ வென்றும் இருக்குமாம். அங்கிருந்து எகிப்து மற்றும் அரேபியாவின் வழியாக வெண்டைக்காய் இந்தியாவிற்கு நுழைந்தது.  இங்கும் இதைப்பயன்படுத்த தெரியாமல் முற்றிய வெண்டைக்காயின் ருசிபிடிக்காமல் விவசாயம் செய்வதை கைவிட்டனர்.

பின்தான் ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சுக்காரர்கள் அதை சரியான பருவத்தில் பிஞ்சாக பயன்படுத்தினர்.  அது மென்மையாக இருக்கும் அதனால் அதற்கு (Ladies Finger) பெண்களின் விரல் என்று பெயரிட்டனர்.

வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குழம்பு வைப்பது சத்து கிடையாது.  அதை பச்சையாக சாப்பிடலாம் அல்லது நேரடியாக வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி பொரியல் செய்து சாப்பிடலாம்.

வெண்டைக்காயின் நற்குணமே அதன் வழவழப்பான திரவத்தில் தான் இருக்கின்றது.  இந்த திரவம் தான் மூளைக்கு முக்கியமானது. இதனால் மூளை சுறுசுறுப்பாக வேளை செய்யும். அதனால் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணிதம் வரும் என்று குழந்தைக்கு கொடுப்பார்கள்.

சில ஆண்கள் பெண் தன்மைப்போல பேசுவார்கள் மற்றும் நடப்பார்கள் அவர்கள் வெண்டைக்காயை தொடர்ந்து பச்சையாக உட்கொண்டு வந்தால் குறிப்பாக ஆண்களின் தோற்றம் மற்றும் ஆண்மை சக்திக்கு தேவையான ஊட்டச்சத்தினைக்கொடுக்கக்கூடியதாகும்.

 

Leave a Reply

Your email address will not be published.