மத்திய அரசின் Group D, C , B பிரிவுக்கு நேர்முகத்தேர்வு ரத்து.

download (58)

மத்திய அரசின் குரூப் டி, சி, பி  ஆகிய பிரிவுகளுக்கு நடத்தப்பட்டு வரும் நேர்முகத்தேர்வுக்கு அடுத்த ஆண்டு சனவரி 1- ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றது என்று பிரதமர் தெரிவித்தார். அகில இந்திய வானொலி நிலையத்தில் மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு ஞாயிறு அன்று கூறிய வார்த்தைகள் பின் வருமாறு.

நான் சுதந்திர தின உரையின் போது கூறியவாறு மத்திய அரசுப்பணியிடங்களுக்கான குரூப் டி, சி, பி ஆகியவற்றிற்கான நேர்முகத்தேர்வு ரத்து செய்யட்டது.  அதற்கான முழு ஏற்பாடும் நடந்து முடிந்து விட்டது.  இனிமேல் வரும் காலங்களில் நேர்முகத்தேர்வுகள் இருக்காது. இது சனவரி 1 ஆம் தேதி 2016 ல் இருந்து தொடங்கும்.

நேர்முகத்தேர்வு என்பது ஊழலுக்கு வழிவகுக்கின்றது.   அது ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்பின்மையை அதிகப்படுத்துகின்றது.  இது போன்ற காரணங்களால் தான் நேர்முகத்தேர்வை  மத்திய அரசுப்பணிகளில் இருந்து நீக்குகின்றோம் என்று கூறினார்.

”இந்தியாவின் அழகே, பல்வேறு மதங்களும், ஜாதிகளும் இருப்பதுதான் ஒற்றுமை என்னும் அந்த தாரக மந்திரத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.