நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்க முடியாது

cow_slaughter_2307949f

நாட்டில் நடந்து வரும் மாட்டுக்கறி  பிரச்சினைக் குறித்து மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜூ ஆங்கிலப்பத்திரிக்கை ஒன்றில் தனது கருத்தைக் கூறியுள்ளார். நாடு முழுவதும் பசுவதையைதடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இந்திய நாடு என்பது தனியொரு கொள்கை சட்டம் மற்றும் மொழி பண்பாடு கொண்ட நாடு கிடையாது.  பல்வேறு மதம் இனம் சாதி மற்றும் மொழிகள் கொண்ட நாடு.  அவரவர் மதக்கோட்பாடுகளை சுதந்திரமாக பின்பற்ற அனுமதியுண்டு இது ஒவ்வொரு குடிமகனின் உரிமையும் கூட.  ஆனால் சில அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் மற்றும் மதவாதத்தினால் தான் இந்த பிரச்சினைகள் பிறந்துள்ளது.

எக்காரணம் கொண்டும் ஒரு சமுதாயத்தின் மீது மற்ற சமுதாய கொள்கைகளை திணிக்க முடியாது. நான் கூட புத்த மதம் தான் ஆனால் நாட்டில் உள்ள சூழ்நிலைகளில் புத்த மதத்தை முழுமையாக பின்பற்ற முடியவில்லை.  நாட்டில் சில அரசியல் வாதிகள் பெரிய பிரச்னையாக மாற்ற வேண்டும் என்று பசுவதைச் சட்டத்தை மாட்டுக்கறி அரசியாலாகவே மாற்றிவிட்டனர்.

மத்திய அரசினைக் குற்றம் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை.  நாட்டில் ஒருமித்த கருத்துகள் என்று நிலவுகின்றதோ அன்று தான் இந்தப்பிரச்னை தீரும் என்று கூறியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.