மர்மக்காய்ச்சலால் சிறுமி பலி

201510232334599636_Mystery-fever-kills-student_SECVPF

ஒன்பது வயது பள்ளி மாணவி ஒருவர் மர்மக்காய்ச்சலால் இறந்து விட்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிச்சனூர் பகுதியைச்சேர்ந்த செந்தில் குமாரின் மகள் தான் ஆர்த்தி அங்கு ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கின்றார்.

அவர் திடீரென்று கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் ஏற்பட்டு.  மிகுந்த பாதிப்புக்குள்ளானார். அவர் குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.  தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஆர்த்தியை மாற்றிவிட்டு சிகிச்சை கொடுத்துள்ளனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் ஆர்த்தி உயிரிழந்தார்.

ஆர்த்தி மர்மக்காய்ச்சலால் தான் இறந்துள்ளார். அது டெங்குவாக இருந்தால் அங்கு மேலும் டெங்கு பரவாமல் காத்துக்கொள்ளவேண்டும். மேலும் அந்த மருத்துவமனையில் டெங்குவை 3 மணிநேரத்தில் கண்டுபிடிக்கும் எலிகா டெஸ்ட் உள்ளதாக  மருத்துவர் கூறுகின்றார்.  சிறுமி ஒருவர் மர்மக் காய்ச்சலால் இறந்து விட்டதால் மற்ற பிள்ளைகளின் பெற்றோர்களும் மிகுந்த கவனத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.