சுக்கு நூறாகின்றது சிரியா

சிரியாவில் உள்ள ஐ.எஸ் இயக்கத்திற்கும் மற்றும் அந்நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத் தலைமையிலான ஆட்சிக்கும் இடையே அதிருப்தி காரணமாக தொடங்கப்பட்ட போராட்டம் போராக உருவானது. பிரச்சினை அவர் நாட்டுக்குள் என்றால் அவர்களே சமாதனமாகியிருப்பர். ஆனால் இயக்கத்திற்கு ஆதரவாக அமெரிக்காவும் அதிபருக்கு ஆதரவாக ருஸியாவும் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் சிறிய சிரியா மிகுந்த தாக்குதல் அடைந்து சுக்கு நூறானது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துவிட்டது. சிரியா மீண்டும் பழைய நிலைமைக்கு வருவது கடினம். எந்த ஆட்சியாக இருந்தால் என்ன ஆட்சி செய்ய மக்கள் வேண்டும் வெறும் நாட்டை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள். ஏற்கனவே சிரியாவின் பாதிமக்கள் அகதிகளாக சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்கள் போரில் சிக்கி இறக்கின்றனர்.
ஆனால் இரு அணிகளும் போரை நிறுத்தாமல் மாற்றி மாற்றி தாக்குகின்றனர். ரஸ்யாவின் ஆளில்லா விமானம் ஒன்று சிரியப்போரின் நிலைமைகளை படம் பிடித்து விட்டிருக்கின்றது. இந்தப்போரை நிறுத்த வேண்டுமென்றால் அமெரிக்காவும் ரஸ்யாவும் மட்டும் தான் முடியும். என்று இந்த வீடியோ தெளிவுறக் காட்டுகின்றது.
Leave a Reply