மேலும் ஒரு தலித் சிறுவன் பலி – ஹரியானா

201510231024255922_Dalit-boy-charged-with-theft-of-a-pigeon-found-dead-in_SECVPF

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தலித் குழந்தைகள் இருவரை சாதிவெறிக் கொடுமையால் உயிரோடு எரித்துக்கொன்றனர்.  அந்த கொடுமை மனதைவிட்டு மறைவதற்குள் மறுபடியும் ஒரு கொடுமை நடந்தேறியுள்ளது.

அமிர்தசரஸில் ஒரு தலித் சிறுவன் வேற்று சாதியினரின் வீட்டில் புறா திருடிவிட்டதாக கூறி அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு காவலாளிகள் சிறுவனின் தாயார் முன்னரே அடிக்கும் போது தாயார் என் மகனை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியிருக்கின்றார்.  ஆனால் போலிஸார்கள் அதற்கு பத்தாயிரம் பணம் கொடு விட்டு விடுகின்றோம் என்று கூறியுள்ளனர். இதனால் தாயார் பணத்தை புரட்டிக்கொண்டு வந்து பார்க்கையில் சிறுவன் அங்கு இல்லை.  தாயார் கேட்டதற்கு ” அவன் தப்பித்து ஓடிவிட்டான் என்று கூறியிருக்கின்றார்கள்” இதனால் அவர் தன் மகனை எல்லா இடத்திலும் தேடிப்பார்த்துள்ளனர். அவன் எங்கும் கிடைக்க வில்லை.

அடுத்த நாள் காலையில் அவனது வீட்டுக்கருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி சிறுவன் இறந்து கிடந்துள்ளான். அவனது கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் இருக்கவும்  அக்கிராம மக்கள், போலிஸார்கள் மீது சிறுவனை அடித்துக்கொண்டு விட்டார்கள் என்று கூறி சாலை மறியல் செய்துள்ளார்கள்.

இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரனை மேற்கொள்ள ஹரியானா அரசு கூறியுள்ளது. சாதிக்கொடுமைகள் அதிகரித்துவிட்டதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published.