மலாலா இந்தியா வருகைக்கு சிவசேனா ஆதரவு தெரிவிப்பு

images (48)

மலாலா என்ற சிறுமியை தெரியாதவர்கள் யாருமில்லை.  ஏனெனில் தீவிரவாதத்தை எதிர்த்து அவர் செய்தப்  அமைதிப்போராட்டங்கள் நிறைய அதற்காக அவர் அமைதிக்கான நோபல் பரிசைப்பெற்றார்.

அதே சமயம் சிவசேனாக்கட்சியைப் பற்றி உலகிற்கே தெரியும் பாகிஸ்தானில் இருந்து காக்கா பறந்து வந்தால் கூட அதைப்பிடித்து வெள்ளை மை அடித்து அடையாளம் தெரியாமல் மாற்றிவிடுவார்கள். பாகிஸ்தான் பாடகர் குலாம் மற்றும் பாகி. முன்னாள் அமைச்சர் கசூரியின் புத்தக வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த சிவசேனா மலாலாவின் இந்திய வருகைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றது.

இதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால் ”நாங்கள் இஸ்லாமியர்களையோ அல்லது பாகிஸ்தானியர்களையோ வெறுப்பவர்கள் அல்லர் எல்லாரும் எங்களுடைய சகோதரர்கள் ஆனால் தீவிரவாதத்தை மட்டுமே எதிர்க்கின்றோம். அதே சமயம் மலாலாவின் நோக்கமும் அதுவே அதனால் நாங்கள் ஆதரிக்கின்றோம்” என்று கூறினர்.

பாகிஸ்தானின் நடிகர்கள், விளையாட்டுவீரர்கள், அமைச்சர்கள், பிரதிநிதிகள் இப்படி யார்வந்தாலும் அவர்ளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிடுபவர்கள். மலாலாவின் வருகைக்கு ஆதரவு தெரிவித்தது பெரும் பரபரப்பை கொடுத்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.