காய்கறிகளும் அதன் மகத்துவமும்.

fruit vegetable isolated on white

 

காய்கறிகளிலும், கீரை வகைகளிலும் மனித உடலுக்கு அவசியமான அதிகமான சத்துக்கள் இருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.  அதனால் தான் எந்த டாக்டரிடம் சென்றாலும் அதிகமான காய்கறிகளும், கீரைகளும் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன.  அதில் என்ன முக்கியத்துவம் இருக்கின்றன என்பதை இங்கு பார்ப்போம்.

வெண்டைக்காய்.

நாம் காய்கறிகடையில் சாதாரணமாக வாங்கும் வெண்டைக்காயில் மிகச் சிறந்த மருத்துவ பொருள் உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.  வெண்டைக்காய் குளிர்ச்சியான தன்மையைக் கொண்டது.  வெண்டைக்காயை சமைக்காமலும் சாப்பிடலாம்.  வெண்டைக்காயில் ” பி ” மற்றும் ”சி” சத்துக்களும் உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

வெண்டைக்காயை சமைக்கும் போது சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது.  வறண்ட குடலை பதப்படுத்துகிறது.  இதனை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் சிறுநீர் பெருகும்.  நாள்பட்ட கழிச்சல் நீங்கும். உடல் வெப்பத்தால் கஷ்டப்படுபவர்களுக்கு வெண்டைக்காய் நல்ல மருந்தாகும்.  சூட்டு இருமலை குணமாக்கும்.  நல்ல வெண்டைப் பிஞ்சுகள் ஒன்று அல்லது இரண்டை பச்சையாகவே தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகி விடும்.  வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் மட்டும் வெண்டைக்காய் குறைவாக சாப்பிடுவது நல்லது.

கத்தரிக்காய்,

கத்தரிக்காய் வெள்ளைக் கலரில் வருகிறது. மஞ்சள் கலரிலும் வருகிறது. மற்றும்                                       வைலட் கலரிலும் வருகிறது. இருந்தாலும் அனைத்து கலரிலும் உள்ள கத்தரிக்காயின் சத்து ஒன்றுதான். சுவையில் மட்டுமே கத்தரிக்காயில் மாற்றம் உண்டு.  பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது.  இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன.  இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் நீங்கும் அதனால்தான் பத்தியத்திற்கு இந்த கத்திரிக்காயை பயன்படுத்துகிறார்கள்.  அம்மை நோயால் அவதிப்படுபவர்களுக்கு கத்தரிக்காய் நல்லது.  அம்மை நோய் வராமல் தடுக்கும் சக்தி கத்திரிக்காய்க்கு உண்டு.

முற்றிய கத்திரிக்காயை நிறைய சாப்பிட்டால் சொறி, சிரங்கில் கொண்டு போய்விடும்.  அதில்லாமல் ஏற்கனவே சரும வியாதி உள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிட்டால் நோய் அதிகரிக்கும்.  நமைச்சல் உண்டாகும்.

முள்ளங்கி.

வேர்ப்பகுதியில் உற்பத்தியாகும் காய் முள்ளங்கியாகும். முள்ளங்கியில்;வைட்டமின் A சத்து அதிகம் உள்ளது.  இது கண் பார்வைக்கு மிகவும் உதவுகிறது. முள்ளங்கியில் சோடியம் மற்றும் குளோரின் இருப்பதால் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.  வயிற்று எரிச்சல், புளியேப்பம் போன்ற அவஸ்தைகள் வராமல் தடுக்கும் சக்தி முள்ளங்கிக்கு உள்ளது. இதன் சாறு தீப்புண்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மற்றும் முள்ளங்கியில் கால்சியமும் மாங்கனீஸ்சும் கலந்துள்ளது.  இது தாய்மார்களுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது.  கருச்சிதைவு ஏற்படும் தாய்மார்கள் முள்ளங்கிச்சாற்றில் கற்கண்டு கலந்து குடித்து வந்தால் கரு நிலைக்கும்.

அவரைக்காய்.

கொடியில் காய்க்கும் காயில் அவரை காய் முதலிடம் வகிக்கிறது.  இதிலும் பல வகை உண்டு.  வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் சாப்பிடும் காலத்தில் பத்திய உணவாக சாப்பிடலாம்.  அவரைக்காயை சமைத்து உண்டால் உடலை பலமாக்கும்.  காம உணர்ச்சியைப் பெருக்கும்.  உஷ்ண தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது.  இரத்த அழுத்தம் உள்ளவர்களும் அவரைக்காயை சாப்பிடலாம்.

புடலங்காய்.

புடலங்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.  இது உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தருகிறது.  உஷ்ண தேகம் உள்ளவர்கள் இதை அதிக அளவில் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும்.  இது எளிதில் செரிமானம் ஆகி நல்ல பசியை எடுக்க வைக்கிறது.  வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தை போக்கும் சக்தி இதற்கு உண்டு.  வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைகளுக்கும் இது நல்லது.  இதை சாப்பிட்டுவந்தால் காமத்தன்மை பெருகும்.

பீட்ரூட்.

பீட்ரூட் என்றாலே அனைவரும் சொல்லிவிடுவார்கள் இரத்தவிருத்திக்கு உதவும் என்ற.  பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்                                                                                        87.7 சதவிகிதம் நீர்ச்சத்தும்

  1. 1.7 சதவிகிதம் புரதச்சத்தும்
  2. 0.1 சதவிகிதம் கொழுப்புச்சத்தும்
  3. 0.8 சதவிகிதம் தாது உப்புக்களும்
  4. 0.9 சதவிகிதம் நார்ச்சத்துக்களும்
  5. 8.8 சதவிகிதம் மாவுச்சத்தும்  அடங்கியுள்ளன.
  6. மற்றும் சுண்ணாம்பு, மகனீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோகச் சத்துக்களும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவைகளும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

கொத்தவரங்காய்.

இது சிறுநீரைப் பெருக்கும். தேக உஷ்ணத்தை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது.  ஆனால் இது பத்தியத்திற்கு உதவாது.  இதன் தீய குணங்களை நீக்க தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து சமைக்க வேண்டும்.

சுரைக்காய்.

இது உடல் வெப்பத்தைத் தணிக்கக் கூடியது.  சிறுநீரைப் பெருக்குகிறது.  உடலுக்கு பலம் சேர்க்கிறது,  தாகத்தை அடக்குகிறது.  சுரைக்காய் பித்த வாயுவை உண்டு பண்ணும்.  சுரைக்காயின் விதைகள் வீரிய விருத்தியை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.