மாட்டுக்கறி வன்முறையில் காஷ்மீரில் பலி

images (40)

ஜம்மு காஷ்மீரில் மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு அங்கு தடைசெய்யப்பட்டது இதனால் மாட்டிறைச்சி தின்றாதாக கூறி ஏற்பட்ட வன்முறையில் லாரி டிரைவர் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரத்தால் காஷ்மீரில் இயல்பு நிலைப் பாதிக்கப்பட்டு மீண்டும் கலவரப்பூமியாக மாறிவிட்டது.

லாரி டிரைவரான ஜாஹூத் மாட்டிறைச்சி சமைத்து உண்டதாக கூறி போலி மதவாதக்கும்பலால் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு மற்றும் சவ அடக்கம் இன்று நடைபெறுகின்றது. இதில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்று 144 தடையானது அரசு அறிவிதிருக்கின்றது.

சர்ச்சைக்குரிய இடங்களான ஆனந்தநாக், பிஜிகரா போலீஸ் நிலையம் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை தடைப் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் அம்மாநில  மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தைப்பயன்படுத்தி நாட்டில் தீவிரவாதிகள் உள்நுழையக்கூடும் அல்லது போலி மதவாதக்கூட்டம் தனது பெயரை நிலைநாட்ட மேலும் தூண்டிவிடும் என்று உளவாளிகளின் கூற்றின்பெயரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜாஹூத் -ன் கொலையைக் கண்டித்து பல அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன.  இந்தக் கொலை சம்பந்தமான பலரை கைது செய்துள்ளது. மேலும் கொலைக்குற்றவாளிகள் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.