புதுதில்லியில் எரிந்து சாம்பலான குடிசைகள்!

India Slum Fire-2

புது தில்லியில் உள்ள மங்கோல்புரியில் பின்னிரவு 2 மணிஅளவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏறக்குறைய 240 குடிசைகள் முற்றிலும் எரிந்து கருகிவிட்டன. 28 க்கும் அதிகமான தீ அணைப்பு வண்டிகள் சென்று 2 மணிநேரத்திற்கு மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீவிபத்து ஏற்பட்டதும் அனைவரும் எழுந்து வெளியே வந்துவிட்டனர். இருந்தாலும் தீ விபத்து ஏற்பட்டு தீக்காயங்கள் சில பேருக்கு ஏற்பட்டது. உயிர்ச்சேதம் ஏதும் பெரிதாக நடைபெறவில்லை என்று தகவல் கிடைத்துள்ளன.

இந்தப்பகுதிகளில் குடிசை வீடுகளில் அதிகமாக குப்பைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதனால் நெருப்பு ஒரு வீட்டில் பற்றியவுடன் மற்ற அனைத்துவீடுகளிலும் உடனே பரவிவிட்டது.

அங்குள்ளவர்கள் தெரிவிக்கையில் மின்சாரக்கசிவு மற்றும் வேறு அசம்பாவிதத்தால் தான் இவ்வாறு தீப்பற்றியிருக்கும் என்று கூறியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.