கிரிகெட் அணியில் முதல் பெண் வீராங்கணை

article-2262146-16F11A60000005DC-213_634x474

உலக கிரிகெட் வரலாற்றில் முதல் முறையாக பெண் வீராங்கணை சாரா டெய்லர் என்பவரை கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளனர். இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஏ-பிரிவு கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாட தேர்வாகியுள்ளார்.

சாரா டெய்லர் இங்கிலாந்து அணியைச்சேர்ந்த விக்கெட் கீப்பர். ஆஸ்திரேலியாவில் உள்ள சில வடக்கு மாகாணங்கள் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி இரண்டு நாள் நடைபெறும் இதில் விளையாட சாரா டெய்லர் தேர்வாகியுள்ளார்.

ICC ன் மகளிருக்கான கிரக்கெட் போட்டியில் சிறந்த விராங்கணையாக சாரா தேர்வாகியுள்ளார். அவர் இதுவரை எட்டு டெஸ்ட் மற்றும் 98 ஒருநாள் மற்றும் 78 T20 யிலும் களமிறங்கியுள்ளார். அவர் இதற்கு முன்பே சில ஆடவர் அணியில் இணைந்து விளையாடியுள்ளார்.

இவரின் உள்நுழைவு மற்ற பெண் வீராங்கணைக்கும் கிரிக்கெட்டில் கலந்து கொள்ள வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published.