கண்ணால் காண்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்

இந்த வார தொடக்கத்தில் வாட்ஸ் அப்பில் மற்றும் சமூக வலைதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு வீடியோ வானது உத்திரப்பிரதேச காவல்நிலையத்தில் தலித் தம்பதிகள் இருவர் உடைகளைக் களைந்து காவலர்கள் துன்புறுத்துவது போன்று வெளிவந்துள்ளது. வீடியோ வெளிவந்தவுடன் எல்லாரும் தன் பங்குக்கு தனது கருத்துக்களை போட்டுத்தள்ளி விட்டார்கள். போலிஸ் அராஜகம். என்று வசைபாடி விட்டார்கள்.
ஆனால் உண்மை அது வல்ல நடந்தது வேறு. காவலர்கள் தனது புகார்மனுவில் கவனம் செலுத்தாததால் தலித் தம்பதிகள் இவ்வாறு தானாகவே தனது ஆடைகளை களைந்து போராட்டம் நடத்தியுள்ளனர். அதை உள்ளுர் ஊடகங்கள் வெளிவிட்டுள்ளன. (மன்னிக்கவும் அதை வெளியிட இங்கு அனுமதியில்லை).
தம்பதிகள் என்ன மனநிலையில் இருந்தனரோ ஒரு கோபத்தில் இவ்வாறு செய்துவிட்டனர். அதை வீடியோ எடுத்த விசமிகள் குறைந்த பட்சம் முகத்தை மறைத்தாவது வெளிவிட்டிருக்கலாம். ஆனால் அதை அப்படியே HD ஆக விடவும் தம்பதிகளின் மானம் தான் போயிற்று. போலிஸாரின் கவனத்தை பெறுவதற்காக கோபத்தில் செய்த வினை இப்படி உலகம் முழுவதும் பரவி உலகத்தின் கவனத்தை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் அவமானத்தையும் கொடுத்துள்ளது.
Leave a Reply