ஹெல்மெட் போடாததற்கு தண்டம் கட்டிய ஆட்டோ டிரைவர்!

201510150300272560_The-driver-of-the-car-had-been-driving-without-wearing-a_SECVPF

சமீப காலங்களாக தமிழகத்தை கலக்கிக் கொண்டு வரும் விசயம் தான் இந்த ஹெல்மெட்.  தமிழகத்தில் கட்டாய தலைக்கவசம் சட்டம் வந்தப்பிறகு யாருக்கு நல்லதோ இல்லையோ திருடர்கள் மற்றும் போலி ஹெல்மெட் விற்பனையாளர்களுக்கு மிகுந்த நல்லதாக போயிற்று. அதே சமயம் விபத்துக்கள் ஏற்பட்டாலும் தலை தப்பித்துவிடுகின்றது. என்ன உடல்தான் அடிபட்டுவிடுகின்றது.

அதில் என்னதான் நீங்க சட்டம் போட்டாலும் நாங்க பைக்ல ஹாயா வருவோம். என்று கூறி நிறைய வாலிபர்கள் ஹெல்மட்  போடாமல் வந்து மாட்டிக்கொண்டு தண்டம் கட்டுகின்றனர். இதுபோல் தினமும் நிறைய பேர் வருவதால் ஹெல்மெட் விவகாரத்தில் காவலர்கள் கொஞ்சம் அதிகமாக கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதில் தான் பரமக்குடியைச் சேர்ந்த அப்பாவி ஆட்டோ ஒட்டுநர் வடிவேலு மாட்டிக்கொண்டார்.

அவர் ஆட்டோவை ஓட்டி வந்திருக்கையில் ஹெல்மெட் அணியாத கூட்டம் LIC ஸ்டாப்பிங்கில் மாட்டிக்கொள்கையில் இவரும் சேர்ந்துவிட அங்கு நடந்த அமளியில் இவரும் கட்டணத்தை கட்டிவிட்டு வந்துள்ளார்.

ஆட்டோ ஓட்டி வந்தேன் என்று கூறியும் கேட்டுக்கொள்ளாத காவலர் அவரிடம் இருந்து கட்டணத்தை வாங்கிவிட்டுதான் விட்டிருக்கின்றார்.  இதனால் பெருத்த சோகத்தில் வடிவேலு உள்ளார். அரசு மக்கள் நலனுக்காக பாதுகாப்புக்காக கட்டாய ஹெல்மட் திட்டம் கொண்டு வந்தால் அதையே இப்படி பயன்படுத்தி மக்கள் நலன் கெடுகின்றது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் தான்.

Leave a Reply

Your email address will not be published.