பழங்களும் அதன் பலன்களும்

fruits

நம்முடைய உணவுப் பழக்கத்தை நாம் அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதுதான் நமக்கு வரும் பல நோய்களுக்கு காரணம் ஆகின்றது.  இயற்கை உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இதனால் பிணிகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியத்துடனும் வாழ முடியும்.

மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் காய்கறிகளையும், பழங்களையும் மிகுதியாக உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமாக வாழ்கின்றனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஏன்! காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த சித்தர்களும் ஞானிகளும் இயற்கை உணவாகிய பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு நூறு வயதை அடைந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்தனர் என சரித்திரம் கூறுகின்றது.

அப்பேற்பட்ட இயற்கை உணவாகிய பழங்களும் அதன் பலன்களும்.

ஆப்பிள்: இருதய நோய், இரத்த கொதிப்பு, மூட்டுவலி போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி ஆப்பிளுக்கு உள்ளது.

திராட்சை: பசி ஏற்படாமை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்ற நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

ஆரஞ்சு:காய்ச்சல், எலும்பு நோய்களுக்கு ஆரஞ்சு மிகச் சிறந்த அரு மருந்தாகும்.  முகப் பரு வராமல் தடுக்கும் சக்தியைக் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழத்தை மிகுதியாக கொடுக்கலாம்.

 மாதுளை: வயிற்றில் பூச்சி, செரிமானம் ஆகாமை, பித்தப்பை, சிறுநீரகக் கல், புற்று நோய் போன்றவை வராமல் தடுக்கும் திறன் கொண்டது.  மாதுளை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்று நோய் வரும் வாய்ப்புக்கள் குறைவு.  இதில் அடங்கியுள்ள பைட்டோ கெமிகல் என்னும் அமிலம் ஆன்றோஜான் என்ற ஹார்மோனை கட்டுப்படுத்தி மார்பக புற்று நோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டிகள் வளராமல் தடுக்கிறது.

வாழைப்பழம்: வாழைப்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு மூட்டுவலி, சிறுநீரகக் கோளாறு, மலச்சிக்கல், காச நோய் அலர்ஜி போன்ற வியாதிகள் வருவதில்லை.

பப்பாளி: பசி ஏற்படாமை, வயிற்றுப் பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது.  உடலை மினுமினுப்பாக வைக்கும் தன்மையை கொண்டது பப்பாளி நமது தோற்றத்தையும் வசீகரமாக்குகிறது பப்பாளி.

நெல்லிக்கனி: நோய் எதிர்ப்பு சக்தியை கூடுதலாக்கும் தன்மை கொண்டது.  உடல் கொழுப்பு குறையவும், தூக்கமின்மை, இளநரை, முடிஉதிர்வு போன்ற வியாதிகளிலிருந்து நமக்கு பாதுகாப்பு தரக்கூடியது.. தாகத்தை போக்கும்.

சாத்துக்குடி: இரத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.  உடல் அசதியையும் போக்கக் கூடியது.  உடலுக்கு உஷ்ணத்தையும் சக்தியையும் தரக்கூடியது.  எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

பலாப்பழம்: கண்பார்வைக்கு உதவக் கூடிய வைட்டமின் A சத்து மிகுதியாக உள்ளது.  நரம்புகளுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

பேரிச்சை: இரும்புச்சத்து, விட்டமின் A மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் பேரிச்சையில் அடங்கியுள்ளது.  இதயத்தை வலிமையாக்குகிறது..

Leave a Reply

Your email address will not be published.