விட்டமின் குறைவும் அதன் நோய்களும்

vitamin

 

வைட்டமின் A:

வைட்டமின் A குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  கருப்பையில் கரு வளர்வதற்கும் பிறந்த குழந்தை போஷாக்குடன் வளரவும் இந்த வைட்டமின் தேவை.  எலும்புகளும் பற்களும் வளர்வதற்கு வைட்டமின் A உதவி செய்கிறது.

பச்சை காய்கறிகள், முருங்க கீரை, வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் A அதிகம் உள்ளது.

வைட்டமின் B:

வைட்டமின் B குறைந்தால் வாயில் புண் உண்டாகும்.  வயிற்று மந்தம் ஏற்படும். அஜீரணம் ஏற்படும்.  இரத்த சோகை வரும்.  பக்கவாதமும் இதய பாதிப்பும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகளில் வைட்டமின் B உண்டு.

வைட்டமின் C

வைட்டமின் C குறைந்தவர்கள் மன நிம்மதி இழப்பர்.  சிடுமூஞ்சியாக இருப்பர்.  எலும்புகளின் சக்தி குறையும்.  பல் ஈறுகள் வீங்கும்.  பற்கள் ஆட்டம் காணும்.  பல் ஈறுகளில் இரத்தம் கசியும்.  தோலில் இரத்தப்போக்கு ஏற்படும்.

ஆரஞ்சுப்பழம், திராட்சை, பச்சை காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் C அதிகம்.

வைட்டமின் D:

வைட்டமின் D இல்லாவிட்டால் எலும்புகள் வலு இழந்து விடும்.  பற்கள் கெடும்.  வைட்டமின் D போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால் வில் போல் வளைந்து விடும்.  வயிறு ஊதும்.

போதுமான சூரிய ஒளி குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் D ஐ தயாரித்து விடும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றில் D வைட்டமின் உள்ளது.

வைட்டமின் E:

வைட்டமின் E குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மற்றும் மலட்டுத்தன்மையை உண்டாக்கும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகள் அதிகம் சேர்த்தால் வைட்டமின் E கிடைக்கும்.

புரோட்டீன் எளிதில் கிடைக்கும் உணவுகள்.

  1. பால்: ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைக்கும்.
  2. சோயா: உடல் வளர்ச்சிக்கு சோயா உதவுகிறது. தசைச் செல்கள் பெருகுவதற்கும் பயன்படுகிறது.  சோயாவில் முழுமையான புரோட்டீன் உள்ளது.
  3. தானியங்கள்: எளிதில் கிடைக்கக்கூடிய உயர்ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.
  4. காளான்: அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. ( அலா்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். )
  5. நிலக்கடலை: நல்ல புரோட்டீன் உள்ளது. கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது.  அளவாக உபயோகப்படுத்த வேண்டும்.

வைட்டமின்கள்:

  1. மீன், மீன் எண்ணெய். வைட்டமின் A.D கிடைக்கிறது. கர்ப்பப்பை மற்றும் குழந்தை வளர்வதற்கும் எலும்பு வளர்வதற்கும் பல் உறுதிப்படுத்துவதற்கும் மீன் எண்ணெய் மற்றும் மீன் உபயோகப்படுகிறது.
  2. முட்டை:A.B.D வைட்டமின்கள் கிடைக்கும், எலும்புகள் பலமாகவும் பற்கள் உறுதியாகவும், குழந்தைகள் வளர்வதற்கும் முட்டையை சாப்பிடுகிறார்கள்.
  3. கீரை: வைட்டமின் E அதிகமாக உள்ளது. தசைகளை தெம்பு ஆக்குகிறது. மலட்டுத் தன்மையை நீக்குகிறது.  கீரையிலுள்ள அமிலம் நல்ல சத்துக்களை தரக் கூடியது.
  4. முட்டைக் கோஸ்: A.B,E வைட்டமின்கள் உள்ளன. கண் பார்வை கூடுகிறது. வாய்ப்புண், குடல் புண் சீராகும்.
  5. ஆரஞ்சு, திராட்சை. வைட்டமின் C அதிகம் உள்ளது. எலும்பு, பல், ஈறு, பலம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.