டோல்கேட்-”சுங்கச் சாவடி”-அதிர்ச்சி

3dda40c4-05fc-4d37-ba32-deabddb9f252_S_secvpf

டோல்கேட் என்பது அரசிற்கு வரி வசூல் மற்றும் வாகனச் சோதனை நடக்கும் இடங்கள். நிறைய விபத்து விசாரனைகள் டோல்கேட்டில் வைக்கப்பட்டுள்ள காமிராவின் மூலமாக முடிவுக்கு வந்துள்ளன.  அரசு நெடுஞ்சாலைப்பணிகளை தனியாருக்கோ அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களுக்காக கொடுத்துவிடும்.  பின் அந்த நிறுவனம் தனது செலவில் அல்லது வங்கிக்கடன் மூலமாக  சாலைப்பணிகளை மேற்கொண்டு முடித்துவிடும்.  பின் இந்தத் தொகையை மக்களிடம் அரசு (அ) அந்த நிறுவனம் பெறும்.  எப்படி யென்றால் இவ்வாறு டோல் பூத்களை வைத்து கனரக மற்றும் பேருந்துகளிடம் வசூலித்துவிடும்.  அரசு நிர்ணயம் செய்யும் அளவுதான் டோல்பூத் கள் தங்களை கடக்கும் போது வாங்கவேண்டும்.

ஆனால் அரசு கடனாக பெற்ற (அ) அந்தச்சாலையின் முழுபணமும் கிடைத்தப்பின்பும் மீண்டும் டோல்கேட்கள் இயங்கி மக்களிடம் வரி வசூலிக்கின்றனர்.  மேலும் நெடுஞ்சாலைகளில் நிறைய இடத்தில் டோல்பூத்கள் இயங்கி வருவதால் டிரைவர்கள் மிகுந்த சிரமம் மற்றும் அதிக வரி செலுத்துதல் போன்றவைகள் ஆகும். மேலும் கனரக வாகனங்கள் மறுசீரமைப்பு செய்யும் போது அவைகள் சாலைவரிகளையும் கட்டுகின்றனராம்.   என்று லாரி ஓனர்கள் புலம்புகின்றனர்.

”சுமை கம்மி கூலி அதிகம்”- என்று சொல்கின்ற கழுதைக் கதைப்போல உள்ளது என்கின்றார்கள் லாரி ஒட்டுநர்கள்.   இதற்காக திரு ராமதாஸ் அவர்கள் தாங்கள் கண்டனம் தெரிவத்து உள்ளார்.  நிறைய டோல்பூத் களில் முழு தொகையும் வசூலித்தப்பின்னரும் பராமரிப்பு கட்டணம் என்று சொல்லி மீண்டும் மீண்டும் கொள்ளை நடக்கின்றது என்று கூறுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.