மாஞ்சா நூலால் பிஞ்சு கழுத்து அறுந்தது

kite

மாஞ்சாகயிறு என்பது பட்டம் விடுவதற்காக செய்யப்படும் நூல்கயிறு.   இது என்னவென்றால் கண்ணாடி மண் மற்றும் இன்னும் சில பொருட்களை  நன்றாக நுனிக்கிய பின் அவற்றை பாகுப்போல் காய்த்தெடுத்து பின் அவற்றில் நூலைப்போட்டு நனைத்து காயவைத்து பட்டம் விடப்பயன்படுத்துவர் போட்டியின் போது அந்த மாஞ்சாக்கயிறு அடுத்தப்பட்டத்தை கிழித்துக்கொண்டு செல்லும் அளவுடைய கயிற்றினைக்கொண்டிருக்கும்.

இதில் கொடுமை என்னவென்றால் அப்படி போட்டியின் போது பட்டம் அறுந்து விழுந்து விட்டாலோ அல்லது கயிறு அறுந்துபோனாலோ அதைப்பற்றி கவலைப்படுவதில்லை அது காற்றில் எங்கோ போய் விழுந்துவிடும் என்று நினைத்துக்கொண்டு இருப்பர். மிகுந்த ஆபத்தை இதனால் ஏற்படும் என்று தெரிந்தும் சமூக சீர்கேடுகள் கவலைப்படுவதில்லை.

அப்படி ஒன்று சென்னையின் பெரம்பூரில் நடந்தது. பாவம் சிறுவன் அஜய் தகப்பனாருடன் மோட்டார் பைக்கில் வலம் வந்துள்ளான்.  அப்போது அங்கு கிடந்த மாஞ்ச நூல் ஒன்று காற்றில் பட்டு சாலையில் விழவும் தந்தையாாின் பைக் வரவும் சரியாக இருக்க சிறுவன் கழுத்தை நொடிப்பொழுதில் அறுத்து விட்டது.

manja

இது போன்று எத்தனை பலிகள் பாருங்கள்

பெரம்பூரின் மருத்துவமனைக்கொண்டு சென்றும் சிகிச்சை அளித்தும் பிஞ்சுக் கழுத்தை சரிசெய்ய முடியவில்லை. அநியாயமாக பிஞ்சுக்குழந்தை இறந்துவிட்டது.  இதனால் மாஞ்சாநூல் தயாரித்து பட்டம் விட்ட பத்து பேரை சென்னைக் காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

விளையாட்டு வினையாகிவிட்டது.  மாஞ்சா நூலால் வருடா வருடம் பலியானாலும்.  சரியான கண்டிப்பு இல்லாமல் தான் இது போன்ற கொடுமைகள் நடக்கின்றன. சிறுவனின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published.