சவூதி இளவரசர் கைது

download (2)

சவூதி அரசாங்கத்துக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் சரி செய்து விடுவார்கள். ஆனால் இப்போது தொடர்ந்து பல சவால்களை சவூதி அரசாங்கம் சந்தித்து வருகின்றது. நேற்றுதான் புனிதயாத்திரையில் நெரிசலில் நிறைய பேர் சிக்கி இறந்தனர்.  அதற்கு முன்பு மேலே இருந்து கீழே கிரேன் விழுந்து 120 பேர் இறந்தனர்.

இப்போது சவூதி இளவரசர் அப்துல் அஜீஸ் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு உள்ள ஒரு பிரத்யேகமான பெவ்ரலி மலைத்தொடரில் தங்கி ஒய்வெடுத்துக்கொண்டார். அப்போது அங்கே குடியிருப்பில் உள்ள அமெரிக்காப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக் அந்தப்பெண் அமெரிக்கா போலிஸில் புகார் கொடுத்தார். அதன் படி போலிஸ் அவரைக் கைது செய்து சென்றனர்.

அவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு இளவரசர் என்ற அந்தஸ்தை வைத்து விதிவிலக்கு தரப்படமாட்டாது என்று அமெரிக்கா கூறியதால். இளவரசரை ஜாமீனில் மூன்று லட்சம் டாலர்கள் கொடுத்து வெளியெடுத்தனர். ஆனால் கோர்ட்டில் வழக்கு நடைபெறும் போது ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதேபோல் பெண்களை பாதுகாக்கும் சவூதியில் சாதரண மனிதன் செய்திருந்தால் அவனுக்கு தண்டனை மிகக் கொடுமையான தாக இருந்திருக்கும். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.