அரசு பேருந்தின் லட்சனத்தால் சிறுமி விபத்து

girl in bus

 

சென்ற வாரம் கேரளாவில் தமிழக அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்தின் பின் சக்கரத்திற்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென சீட் உடைந்து கீழே விழுந்துவிட்டார். அவர் சக்கரத்தில் மாட்டி உயிரிழக்க நேரிட்டிருக்கும் மயிரிழையில் அவர் தப்பித்து விட்டார். ஆனால் அந்த செய்தி மறப்பதற்குள் இன்னொரு செய்தி.

பேருந்தில் இருந்து இறங்கும் போது படிக்கட்டின் கைப்பிடிக்குள் சிக்கி பதின்ம வயது பெண்குழந்தையின் விரல் துண்டானது. நீலகிரி மாவட்டத்தின் மண்வயல் என்ற கிராமத்தினைச்சார்ந்த நாசர்-ஆபி என்ற தம்பதிகளின் மகளாகிய பைஸ்னா என்பவர் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஆபியுடன் கூடலூருக்கு சென்றனர் அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய போது விரல் படியில் உள்ள கைப்பிடியில் சிக்கிக்கொண்டு பதற்றத்தில் இழுக்கும் போது பிஞ்சு விரல் துண்டானது.

உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு பின் கேரளாவின் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றிருக்கின்றனர்.  இதனால் அவ்வூர் மக்கள் மறியல் நடத்தியார் அரசுப்போக்குவரத்துக் கழகம் அப்பெண்ணின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்கும் என்று கூறினர்.

டிக்கட் தொகையையும் அதிகப்படுத்தியாயிற்று, அரசுப்போக்குவரத்தின் டிரைவர் மற்றும் கன்டக்டர்களுக்கு அதிக சம்பளமும் படிக்காசும் கொடுத்தால் போதாது. அரசு பஸ்களின் தரம் மானத்தை வாங்குவது மட்டுமின்றி உயிரையும் போக்கக்கூடியது.

தனியார் பஸ்களும் அதே டிக்கட் காசைத்தான் வாங்குகின்றார்கள். ஆனால் அவர்களின் பேருந்துகள் அவ்வளவு பராமரிப்போடு அழகாகவும் வசதிகளோடும் உள்ளது. அதே சமயம் விரைவாகவும் செல்கின்றன.  இப்படியே போனால் அரசு பேருந்துக்கள் கல்லா கட்டுவதே திண்டாட்டம் தான்.

Leave a Reply

Your email address will not be published.