நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்.

happy employees

 

கடிகாரம் ஓடிக் கொண்டே இருக்கிறது.  அதுபோல் மனிதனுடைய இதயமும் ஓடிக் கொண்டே இருக்கிறது. கடிகாரம் நின்று போனால் நிசப்தமே.   அதுபோல் இதயம் நின்று போனால் நிசப்தமே.

இப்படி இதயத்திற்கு நாம் சுகமான சுகம் கொடுக்க வேண்டும். புகை, மது, டென்ஷன் ஆகியவற்றால் நமது இரத்த அழுத்தத்தை நாமே அதிகரித்துக் கொள்கிறோம்.  நமக்கு நாமே தீங்காக இருக்கலாமா என்பவற்றையெல்லாம் ஆராய்ந்து உலக இதயநாளான செப்டம்பர் 26 இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.       நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் ஓரு உறுப்பு உண்டு என்றால் அது இருதயமே.  நாம் தூங்கினாலும் சரி.

நாம் முழித்துக் கொண்டிருந்தாலும் சரி. நமது இதயம் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 689 தடவைகள் இதயம் துடிக்கிறது. உலகில் இந்தியர்களுக்கே அதிகம் மாரடைப்பு வருகிறது என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.  இந்த தகவல் நமக்கு பயத்தை ஏற்படுத்துகின்றது.  உடல் ஆரோக்கியத்திற்கு இருதய ஆரோக்கியம் முதன்மையானது, அவசியமானது.  மற்ற நோய்களைப் போல இல்லாமல், இருதய நோய்களை தடுக்க முடியும் என்பது அசைக்கமுடியாத உண்மை.

வருமுன் காப்போம் என்பது எந்த வியாதிக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இருதய வியாதிக்கு மிகவும் பொருந்தும். இருதய நோய் வராமல் தடுப்போம். இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி. விவேக்போஸ் கூறும் சில எளிய முறைகள்.

  1. சாப்பாட்டில் காய்கறிகள், மற்றும் பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை, உப்பை குறைப்பது அவசியம்.  அரிசிவகை உணவையும், நொறுக்குத்தீனியையும் தவிர்ப்பது நல்லது.
  2. தினந்தோறும் அரைமணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்தல் அவசியமானது
  3. பீடீ, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலை சுவைப்பது போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது.
  4. உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது அவசியமானது. இதற்கு ”உயரம் (செ.மீ.,ல்)-100=சரியான எடை (கிலோ கிராமில்).  அதாவது ஒருவது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.
  5. ஒருவரது இரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருக்க வேண்டும். சர்க்கரையின் அளவானது சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள் இருப்பது அவசியமானது.
  6. மன நிம்மதி. மனதை நாம் எப்பொழுதும் அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமானது. குறிப்பாக யோகா, தியானம் இதற்கு மிகவும் பயன்படுகிறது. வேலை செய்யும் இடம் ஆரோக்கியமான சூழல் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
  7. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்களும், உங்களுடன் வேலை செய்வோரும் புகைப்பதோ, புகையிலை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  8. பணியாற்றும் அலுவலகத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்தோ, சைக்கிளிலோ செல்ல வேண்டும். மேலும் ”லிப்டை” பயன்படுத்தாமல், படிகளில் நடந்தே ஏறிச் செல்வது போன்ற செயல்கள் நன்மை பயக்கும்.
  9. நீங்கள் மட்டுமன்றி, உங்களுடன் பணியாற்றுவோருக்கும் ஆரோக்கியமான உணவு எது என்று அறிவுறுத்திச் சொல்லி கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.
  10. அலுவலகத்தில் நீங்கள் மன அழுத்தம் இன்றி பணியாற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.