லெக்கின்ஸ் கலாச்சாரம் என்பது ஆபாசமா அல்லது ஆபத்தா?

leggins

பொதுவாக மேற்கத்திய கலாச்சாரங்கள் நம் நாட்டில் வெகு வேகமாக பரவிவிடுகின்றன. அதற்கு காரணம் இணையமும் ஒன்று அப்படி பரவியதுதான் இந்த லெக்கின்ஸ்.  பொதுவாக ஆண்பிள்ளைகள் மட்டுமே ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ்களை அணிந்து கொண்டு வருவார்கள். இறுக்கமாக இருப்பதால் அதிக வெப்பம் ஏற்படுகின்றது.

மேற்கத்திய நாடுகளில் குளிர் அதிகம் அதனால் அவர்கள் ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான சாக்கு உறைகளில் தைத்த ஆடைகளை அணிந்தனர்.  ஆனால் நம் நாட்டில் காலைவெயிலே 40 டிகிரிக்கு அடிக்கும் அப்படி இருக்கையில் நம்மவர்கள் ஜீன்ஸ் அணிந்தால் அவ்ளோதான். அடியிலிருந்து தலை வரை ஏறித்தாக்கும். வெப்பம் மற்றும் இறுக்கம் காரணமாக ஆண்களின் விந்து உற்பத்தி குறைந்து விடுகின்றது. இதனைக்காரணம் காட்டித்தான் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என் சட்டமியற்றினர்.

இப்போது இன்னொன்று லெக்கின்ஸ் என்பது பேன்ட்டைப்போலத்தான் ஆனால் மெலிதான துணியில் இறுக்கமாக தைக்கப்பட்ட பேன்ட். ஆண்பிள்ளைகள் போட்டு நடந்தால் பேன்ட் போட்டிருக்கின்றார்களா இல்லையா என கண்டேபிடிக்க முடியாது.  அதேசமயம் ஆண்களுக்கே இந்த மாதிரி என்றால் பெண்பிள்ளைகள் அணிந்தால். வெட்கக்கேடுதானே.  யாராவது சமுகவாதிகள் இதைப்பார்த்துக்கொண்டு சும்மாவிடுவார்களா அதான் கட்டுரை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

பெண்களுக்கு சுதந்திரம் நம் நாட்டில் எப்போதும் உள்ளது.  ஆனால் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதால் அழகுக்கு பதில் ஆபத்து தான் வரும். ஏனென்றால் அந்த அளவுக்கு அதில் ஆபாசம் மட்டுமே உள்ளது. தயவு செய்து மேற்கத்திய நாட்டின் கலாச்சாரத்திற்கு ஆசைப்பட்டு ஆபாசமாக துணி அணிய வேண்டாம் என்பதே சமூக ஆர்வலரின் வாதம்.

Leave a Reply

Your email address will not be published.