கரைசேருமா சேது சமுத்திரத் திட்டம்

tamil-news-paper-76

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள கடலில் உள்ள இடத்தில் ஆழம் அதிகரித்துக் கப்பல் செல்லும் வகையில் உண்டாக்குவதுதான்.  இதனால் மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவை தாண்டிச்செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றி தேவையில்லாமல் பயணிக்கும் தொலைவு குறையும்.  இந்தியாவின் துறைமுகத்திற்கு அதிகமாக வருவாயும் கிடைக்கும். அதே சமயம் இந்தியாவின் கப்பல்களும் வரியில் இருந்து தப்பிக்கும்.

இது தமிழர்களின் நூற்றாண்டு காலமாக கனவுகள்.  ஆனால் இதை செயல்படுத்தி திட்டம் ஆரம்பித்த உடன் இந்துக்களின் நம்பிக்கையில் ராமர் பாலம் என்று ஒன்று கடலில் உள்ளது. அதைச்சேதப்படுத்தக்கூடாது என இந்துத்துவா அமைப்பினர் அத்திட்டத்தை நிறுத்திவிட்டனர். இதனால் அது கிடப்பில் போடப்பட்டது.

‘ராமர் பாலத்துக்கு எந்த சேதமும் இல்லாமல் மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத் தப்படும். இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வெளியிடுவார்’ என மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சேது சமுத் திரத் திட்டப் பணிகள் தொடங் கியபோது கப்பல் துறை அமைச்ச ராக இருந்த டி.ஆர்.பாலு ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

சேது சமுத்திரத் திட்டம் தொடக்கம்

sethusamudaram_map_20071001

இந்தச் சேதுசமுத்திரத் திட்டம் ரூ.2,400கோடியிலான சேது சமுத்திரத் திட்டப் பணிகளை 2005-ல் அப்போதைய பிரதமர் திரு.மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகி யோர் தொடங்கி வைத்தனர். மன்னார் வளைகுடா பகுதியில் கடலை ஆழப்படுத்தும் இத்திட்டம் 300 மீட்டர் அகலமும், 160 கி.மீ. நீளமும், 13 மீட்டர் ஆழமும் கொண் டது. திட்டத்தின் பெரும்பகுதி பணிகள் முடிந்துள்ளன. இன்னும் 30 கி.மீ. அளவுக்கே கல்வாய் தோண்ட வேண்டியுள்ளது.  சேது சமுத்திரம் முடியும் தருவாயில் ராமர்பாலத்தனைக் காரணம் காட்டி முடக்கி வைத்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்தபோது கால்வாய் களின் பெரும்பகுதி பயன்படுத்தும் நிலையில் இருப்பது கண்டறியப் பட்டது. கால்வாய்கள் சேதமடைய வாய்ப்புகள் மிகவும் குறைவு. எங்களுக்கு 6 மாத கால அவகாசம் கிடைத்திருந்தால் கடலில் கால்வாய் அமைக்கும் உலகின் முதல் திட்டத்தை நிறைவு செய்து வரலாறு படைத்திருப்போம்.

ஆனால் இப்போது மாற்றுப்பாதையில் இந்ததிட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கப்பல் துறை அமைச்சர் டி. ஆர். பாலு தெரிவத்துள்ளார். அப்போதைய செலவுப்படி 2500 கோடி என்றால் இன்றைய செலவுப்படி எப்படியும் 3000 கோடிக்கும் மேல் தாண்டும்.  ஆனால் மாற்றுப்பாதையென்றால் ஏற்கனவே செய்த 1000 கோடி செலவும் அவ்வளவுதான்.  இதைத்தான் வீண் செலவு என்று மக்கள் கூறுவார்கள்.  என்னதான் சேது சமுத்திரம் திட்டம் நிறைவேறினாலும் அது லாபமீட்டாது கடனைத்தான் கட்டும்.

Leave a Reply

Your email address will not be published.