மெக்காவின் நெரிசலின் காரணம்

Pilgrims and first responders gather at the site of a crane collapse that killed dozens inside the Grand Mosque in Mecca, Saudi Arabia, Friday, Sept. 11, 2015. The accident happened as pilgrims from around the world converged on the city, Islam's holiest site, for the annual Hajj pilgrimage, which takes place this month. (AP Photo)

சவூதி அரேபியாவின் மெக்காநகரின் அருகாமையில் தான் மினா என்ற நகரம் உள்ளது, அங்கே ஹஜ் யாத்திரையின் முடிவில் சாத்தான் மீது கல்லெறியப்படுகின்றது.  அந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவ  3 பேரோடு 700 பேருக்கும் மேற்பட்ட யாத்திரிகள் மூச்சுத்திணறி இறந்தனர். மேலும், 863 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்தாண்டு ஹஜ் புனித யாத்திரையில் கலந்து கொள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் உட்பட 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு வந்துள்ளனர்.

இப்போது தான் கடந்த வாரத்தில் மெக்காவின் பெரிய மசூதியில் கிரேன் சரிந்து விழுந்து 120 பேர் இறந்நதனர். 394 பேர் காயம் அடைந்தனர். இந்த சோகம் மறைவதற்குள், மெக்காவில் மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது. மெக்கா மசூதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மினா. இங்குள்ள 204வது தெருவில் ஜமராத் பாலம் உள்ளது. இதை தாண்டிதான்  சாத்தான் மீது கல் எறியும் இடத்துக்கு செல்ல வேண்டும். அங்குள்ள 3 தூண்கள் மீது ஹஜ் யாத்ரீகர்கள் கற்களை வீசுவது வழக்கம்.

இதன் காரணம்.

பொதுவாக ஆண்டாண்டுக்கு யாத்திரிகள் அதிகமாக வருவது அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதனால் சவூதி அரசாங்கம் மசூதியை விரிவாக்கம் செய்யும் பணியைச் செய்து வருகின்றது.  மேலும் மெக்காவில் இருந்நது மினாவுக்கு செல்ல ஆறு கிலோமீட்டர் தூரம் சாலையில் செல்ல வேண்டும் இதில் ஆறு சாலைகள் உள்ளன.  அதில் ரயிலில் வரும் பயணிகளுக்கு தனி வழி.

பயணிகள் இருவழியிலிருந்தும் வெளியேற வழிகள் இருந்தது.  மிக அதிகமாக புனித யாத்தரிகள் வந்ததால் மெக்காவில் அதிக நெரிசல் இருந்தது.  இதனால் அதிகமாக நெரிசல் அந்தப் பாதையில் ஏற்பட்டிருந்தது. மேலும் வெயில் சுமார் 45 டிகிரியில் வாட்டி வதைத்தது.  இதனால் வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தனர். மீதமவர்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு மூச்சுத்திணறி இறந்தனர்.

730 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் ஐதராபாத்தை சேர்ந்த பெண் என்றும் தெரியவந்துள்ளது. காயமடைந்த பெண்களும், முதியவர்களும் அலறல் சத்தத்துடன் தரையில் விழுந்து கிடந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வகை்கப்பட்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்டையில் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணியில் 4 ஆயிரம் வீரர்களும், 220 ஆம்புலன்சுகளும் ஈடுபட்டுள்ளனர். இப்படி மெக்காவில் இறந்தவர்களில் 3 இந்தியர்கள் அதில் ஐதராபாத்தைச்சார்ந்த பெண் ஒருவர்.

ஒருவர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கலூரைச் சேர்ந்த முகமது என்றும், மற்றொருவர் ஐதரா பாத்தை சேர்ந்த பீபீ ஜான் என்ற பெண் எனவும் தெரிய வந்துள்ளது. இத்தகவலை கேரள மாநில கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.சி.ஜோசப் திருவனந்தபுரத்தில் நேற்று மாலை நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும், கூறுகையில், ‘‘இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி  காயம் அடைந்த 863 பேரில், 2 இந்தியர்கள் உள்ளனர் என்று, சவுதி அரேபியாவில் இருந்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிடைத்துள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
உடனே மருத்துவக்குழுவை நியமித்து எவ்வித வதந்தியும் பரவாமல் தடுக்கவும் சவூதி அரசாங்கம் பணியை முடுக்கியுள்ளது. 5000 மருத்துவர்களை தனியாக நியமித்து மக்களைக்காத்து வருகின்றன. அனைத்து வாயில்களும் மூடப்பட்டு தடுக்கப்பட்டன.

மயிலாடுதுறையை சேர்ந்தவர் பலி

நாகப்பட்டடினத்தின் மயிலாடுதுறையில் அருகே உள்ள வடகரை மதரசா தெருவில் வசிப்பவர் சம்சுதீன் முகமது இப்ராகிம் என்பவர் . இவர் உட்பட வடகரைைய சேர்ந்த 6 பேர் மெக்காவுக்கு ஹஜ் பயணம் சென்றுள்ளனர்.  இந்தநிலையில், நெரிசலில் சிக்கி சம்சுதீன்  முகமது இப்ராகிம் பலியாகி விட்டதாக தகவல் வந்தது. இத்தகவல் நேற்று மாலை 6  மணிக்கு வடகரை பள்ளிவாசலில் அறிவிக்கப்பட்டது. இவர்களின் வயது 62 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.