கடிகாரம் தயாரித்ததற்கு பரிசு தண்டனை

ahamed

டெக்சாஸ்: வீட்டிலேயே மின்னணு கடிகாரம் ஒன்றைத் தயாரித்த அமெரிக்கவைச் சேர்ந்த அஹமது முஹம்மது என்ற 14 வயது சிறுவனை வெடிகுண்டு தயாரித்ததாகக் கூறி அமெரிக்க காவல்துறையினர் கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகமது முகமது அவரது முழுப்பெயர் .அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்கில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அகமது, வீட்டிலேயே உருவாக்கி மின்னணு கடிகாரத்தை பள்ளிக்கு கொண்டு வந்து தனது வகுப்பு ஆசிரியரிடம் மிகுந்த ஆர்வத்துடன் காண்பித்திருக்கிறார்.இந்த தொழில்நுட்ப சாகசத்திற்காக ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும் என்று அவர் எதிர் பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதனைப் பார்த்த ஆசிரியர் கடிகார அமைப்பு வெடிகுண்டு போல் உள்ளது எனக் கூறி பள்ளி நிர்வாகமும் சேர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அன்று மாலையே அகமது கைது செய்யப்பட்டார். பள்ளியில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

14 வயது பள்ளி மாணவர் அறிவியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்காக பாராட்டி ஊக்குவிக்கப்படுவதற்கு பதில் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்பட்ட சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த சம்பவம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அஹமது முஹம்மது வெள்ளை மாணவர் ஒருவர் இது போல செய்திருந்தால் பாராட்டி இருப்பீர்கள் . ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்பதாலேயும், முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்கின்றனர். என்பதாலேயும் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர் என பல சமூக ஆர்வலர்கள் அமெரிக்க காவல்துறைக்கு எதிராகவும், பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலைக்கு இலக்கான அப்பாவி மாணவர் அகமதுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் #IStandWithAhmed எனும் ஹாஷ்டேகை உருவாக்கி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இணையவாசிகள் மட்டும் அல்லாமல் விஞ்ஞானிகள் உள்ளிட்டோரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலர் ஜோஷ் எர்னஸ்ட் கூறும்போது, “அகமதுவின் ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொண்டது வெட்கக் கேடானது. ஆனால், இந்த ஒரு சம்பவம் போதும், நாம் நமது மனசாட்சியை தட்டி எழுப்பிக்கொள்ள, நமது பாரபட்சங்கள் எந்த வகையில் வெளிப்பட்டாலும் அதனை கேள்விக்குட்படுத்திக்கொள்ள இந்த சம்பவம் ஒரு பாடம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஹிலாரி கிளிண்டன் தெரிவிக்கும் போது, “முன் அனுமானங்களும், பயமும் நம்மை எப்போதும் பாதுகாப்பாக வைக்காது. அகமட், உன் ஆர்வத்தை தொடரு. தொடர்ந்து ஆக்கபூர்வமாகச் செயல்படு” என்று ட்வீட் செய்துள்ளார். கூகுள் நிறுவனமும், அகமதுவை அறிவியல் கண்காட்சிக்கு அழைப்பு விடுத்து, “உன் கெடிகாரத்தைக் கொண்டு வா” என்று அழைத்துள்ளது.

இந்த நிலையில் இந்தச் சிறுவனின் திறமையை மதித்து அமெரிக்க அதிபர் ஒபாமா அகமதுவை அடுத்த மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெறும் ‘வானியல் இரவு’ நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அதிசயச் சிறுவன் அகமதுவுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள், நாசா வானவியல் ஆய்வாளர்களை சந்திக்க அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.