தேமுதிக தொண்டார் தீக்குளித்து தற்கொலை செய்தார்

vijaykanth
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்பொது பொதுக்கூட்டம் முடியும் தருவாயில், திண்டுக்கல் 8வது வார்டு கிளைச்செயலாளர் கஜேந்திர பிரபு கூட்டத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவரை உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மதுரை மருத்துவமனையில் விஜயகாந்த் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கஜேந்திர பிரபு, மாவட்ட செயலாளர் ரவிக்குமார் பற்றி பல புகார்களை தெரிவித்தார். தன்னிச்சையாக செயல்படுகிறார். தன்னை கட்சியிலிந்து நீக்கிவிட்டார். அவர் பதவி விலக வேண்டும் என்பதற்காகவே தான் தீக்குளித்ததாகவும், அவர் அந்த பதவியில் இருந்தால் கட்சியில் முன்னேற்றம் ஏற்படாது என்றும் விஜயகாந்திடம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி விசாரணை செய்த விஜயகாந்த், அந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, நேற்று(செப்.23) திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ரவிக்குமாரை பதவியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரபிரபு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.