மனித உடற்பாகங்களை இயக்கும் தண்ணீர்.

water bot

உலக நிலப்பரப்பளவில் 75 சதவிகிதம் நீர் இருப்பது போல, மனித உடலிலும் உள்ளது ஆச்சரியத்தைத் தருகின்றது.  ஒவ்வொருவருடைய உடல் அமைப்பிற்கு தகுந்தவாறு சிறிதளவு வேறுபாடுகள் இருக்கின்றன.

நமது உடலில் உள்ள தண்ணீரின் அளவு.

இரத்தத்தில் 90 சதவிகிதமும்   தசைகளில் 60 சதவிகிதமும்                                                                    எலும்புகளில் 22 சதவிகிதமும் உள்ளது.

நமது உடலில் வெளியேற்றப்படும் நீரின் அளவு.

சிறுநீராக 1500 மில்லியும்  வியர்வையாக 400 மில்லியும்  சுவாசத்தின் மூலம் 400 மில்லியும்                  மலத்தின் மூலம் 100 மில்லியும் வெளியேற்றப்படுகிறது.

நீர்ப்பகுதிகள் உலகில் ஏரி, குளம், வாய்க்கால், கிளறு, ஆறு, சமுத்திரம் என்று இருக்கின்றன.

அதுபோல் நமது உடலிலும் மார்பு, வயிறு, மூளை முதலிய இடங்களிலும் நீர்ப்பகுதிகள் உள்ளன.

நீரின் அளவு வயிற்றில் குறைந்தால் அதுவே வயிற்று வலி வருவதற்கான காரணமாகிறது.

மார்பில் நீரின் அளவு குறைந்தால் சளி, இருமல் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.

மூளைப் பகுதியில் நீரின் அளவு குறைந்தால் மயக்கம் வருவதற்கு காரணமாகிறது.

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.  அவ்வாறு குடித்த நாட்களில் மிகுந்த சுறுசுறுப்பும் உற்சாகமும் வேலை செய்யும் திறனும் நன்றாக இருப்பதை நாம் நம் அனுபவத்தில் காண முடிகின்றது.

அண்மையில்,மூட்டு வலியென்று எனக்கு தெரிந்த ஓர் பெண் நண்பர் மருத்துவரிடம் செல்ல, அவர் மூட்டுப் பகுதியில் நீர் அதிகம் உள்ளது என்று, அதை அகற்ற, மூட்டு வலி அதிகமாகி இப்பொழுது ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.       நமக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கும். தெரிந்திருந்தாலும் சில நல்லவைகளைக் கடைபிடிக்காததால் அனுபவிக்கும் உடல் உபாதைகளுக்கு நாம் குடிக்கக்கூடிய தண்ணீரின் அளவு குறைந்து விட்டதுதான் காரணம் என்பதை உணர்ந்ததன் விளைவாக தொகுக்கப்பட்டதே இந்த செய்திகள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுத்தமான தண்ணீரினை அதிகமாக பருகுவோம்.

மருத்துவச் செலவைக் குறைப்போம்.

ஆரோக்கியம் பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published.