மெக்காவில் மேலும் பலிகள்!

201509241429435544_At-least-150-Dead-Over-400-Injured-in-Stampede-Near-Mecca_SECVPF
மெக்கா மசூதி அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
பக்ரீத்பண்டிகையொட்டி இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் குர்பானி கொடுத்து சிறப்புத்தொழுகை செய்து கொண்டாடி வருகின்றனர். அதனையொட்டி மெக்கா நகரிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ பண்டிகை, இன்று தொடங்கியது. இருப்பினும், முன்னதாகவே, பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகருக்கு சென்றனர். வழக்கம்போல், இந்த ஆண்டும் லட்சக்கணக்கானோர் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் திரண்டு தங்கள் ‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக, அந்த மசூதியில் கட்டிடத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்தது.
பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. இன்று ஹஜ் புனித வழிபாட்டிற்கு பலர் மொத்தமாக குவிந்தது காரணமாக மெக்கா மசூதி அருகே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மினாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
நெரிசலில் சிக்கி 390 பேர் காயம் அடைந்ததாக சவுதி அரேபியா தொலைக்காட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் நிலையானது மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்து உள்ளது.
மினாவில் சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று தெரியவந்து உள்ளது.
இப்போதுதான் மெக்காவில் கிரேன் விழுந்து நிறைய பேர் இறந்துள்ளனர். இப்போது இப்படி கூட்ட நெரிசலில் சிக்கி நிறைய பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.