சவூதிக்கு பிரதமர் வாழ்த்து

saudi

சவூதி அரேபியாவின் தேசிய தினத்திற்கு இந்தியப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.

சவுதி அரேபியா நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தியில் கூயிருப்பதாவது:

”சவுதி அரேபியாவின் 85-வது தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சவுதி அரேபிய மன்னர் அப்துல் அஸீஸ் என்பவர் கடந்த 1932-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந்தேதி சவுதி அரேபியாவை சுயராஜ்யமாக அறிவித்தார்.அந்த நாளைத்தான் சவுதி அரேபிய மக்கள் அந்நாட்டின் தேசிய தினமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.