நாம் உண்ணும் உணவில் உண்டு மருத்துவம்.

food medicine

 

நாம் சாப்பிடும் எத்தனையோ உணவுப் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் உண்டு. நாம் அவற்றை அறிந்து தேவைகேற்ப சரிவிகிதமாக சாப்பிட்டால் உணவே மருந்தாகும்.

வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லை. ஆனால் இதைச் சாப்பிடும் பொழுது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது.  இது ஜீரணத்தை உண்டு பண்ணுகிறது.

சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் வெங்காயம் ஒரு மாமருந்து.  வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.  எப்பொழுதும் வெங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள்ள வராது.

வாழைப் பழங்களில் சோடியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைய உள்ளன.  ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் ஏறாமல் சீராக இருக்கும்.

கறிவேப்பிலையில் இரும்புச் சத்து நிறைய இருப்பதால் இதை பச்சையாகவே சாப்பிட்டு வரலாம்.  கறிவேப்பிலை இரத்தத்தை சுத்தம் செய்கிறது.  பசியை தூண்டுகிறது.  வயிற்று இரைச்சலை மட்டுப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.