இக்கான் பக்கார்

ikkan bakkar

தேவையான பொருட்கள் :

 

வவ்வா மீன்            – 1

பழுத்த மிளகாய்        – 5

சீனி                    – ½ தேக்கரண்டி

எலுமிச்சை சாறு        – 1 மேசைக்கரண்டி

லெமன்                 – 1

மஞ்சள் கிழங்கு                – 1 துண்டு

சின்னவெங்காயம்      – 3

எண்ணெய்              – 2 தேக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. மீனை நன்றாக சுத்தம் செய்துவைக்கவும். பிறகு மீனின் இரண்டு பக்கமும் லேசாக கீறி விடவும். இப்படி செய்தால் மீனுக்குள் மசாலா பொருட்கள் நன்றாக சேர்ந்து இருக்கும். பின் மிளகாய், வெங்காயம், மஞ்சள், லெமன் எல்லாவற்றையும் அரைத்து உப்பு எலுமிச்சை சாறு மற்றும் சீனி கலந்து வைக்கவும்.

 

  1. இந்த கலவையில் 1 கரண்டி அளவு மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கலவையை எண்ணெயில் கலந்து மீனின் வயிற்று பகுதியிலும், இரண்டு பக்கமும் தடவி பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.

 

  1. பார்பிக்யூ முறையில் அதாவது கீலே நெருப்பு மூட்டி மேலே மீனை தொங்க விட்டு மீனை சுட்டெடுக்க வேண்டும். இதுவே பார்பிக்யூ முறை ஆகும். சுட்டெடுத்த மீனை ரெடியாக உள்ள கலவையில் டிப்பிங் சாஸாக வைத்து சாப்பிடலாம்.

 

Leave a Reply

Your email address will not be published.