இறால் சிப்ஸ்

இறால் சிப்ஸ்

 

 

தேவையான அளவு :

 

இறால்                         – 1 கப் (நன்கு கழுவி சுத்தம் செய்தது)

இஞ்சி விழுது          – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள்            – 1 தேக்கரண்டி

பூண்டு விழுது          – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்           – ¼ தேக்கரண்டி

அஜினோமோட்டோ    – ½ தேக்கரண்டி

முட்டை                – தேவையான அளவு

ரஸ்க் தூள்             – தேவையான அளவு

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. இறாலை தோல், ஓடு நீக்கி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தனியாக, கழுவி சுத்தம் செய்த இறாலை போட்டு, இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி விழுது, பூண்டு விழுது, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து, இந்த கலவையை நன்றாக பிரட்டி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

 

  1. ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக்கருவை போட்டு நன்றாக அடித்து வைக்கவும். ஒரு தட்டில் ரஸ்க் தூளை போட்டு வைக்கவும். அதன் பிறகு மசாலாக் கலந்து ஊறிய இறாலை மசாலாவுடன் எடுத்து லேசாக கசக்கி விட்டு. தனித்தனியாக இறாலை எடுத்து அடித்த வெள்ளைகரு முட்டையில் பிரட்டவும். அதை மறுபடியும் முட்டையில் பிரட்டியுள்ள இறாலை ரஸ்க் தூளில் போட்டு பிரட்டவும்.

 

  1. பொறிக்க தேவையான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதன் பிறகு எண்ணெய் சூடானதும் ரஸ்க் தூளில் போட்டு பிரட்டிய இறாலை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மொறு மொறுவென்று பொறித்து எடுத்து சூடாக பரிமாறினால், சுவையான இறால் சிப்ஸ் ருசியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.