இறால் வறுவல்

இறால் வறுவல்

 

 

தேவையான அளவு :

 

இறால்                         – ¼ கிலோ

வெங்காயம்            – 2

வத்தல் மிளகாய்       – 20

பூண்டு                  – 10

தேங்காய்               – ¼ மூடி

தக்காளி                – 2 பழம்

இஞ்சி                  – 1 விரலளவு

கறிவேப்பிலை         – 1 கையளவு

சோம்பு                         – 1 தேக்கரண்டி

சீரகம்                  – 1 தேக்கரண்டி

எண்ணெய்              – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்           – ¼ தேக்கரண்டி

உப்பு                   – 1 தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. இறாலை தோல், ஓடு நீக்கி நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். மிக்ஸியில் இஞ்சியையும், பூண்டையும் நன்றாக அரைக்கவும். பிறகு வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டவும். பின் அம்மியில் தேங்காய் துருவல், 15 வத்தல் மிளகாய், சோம்பு மற்றும் சீரகத்துடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

 

  1. பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், சிறிது கறிவேப்பிலை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளியை துண்டுகளாக போட்டு நன்றாக வதக்கவும்.

 

  1. பின்னர் இறாலையும், மஞ்சள்தூளையும் சேர்த்து பிசறி வாணலியில் போட்டு 5 நிமிடம் வரை வதக்கிய பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, தேங்காயை சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

 

  1. இறாலும் மசாலாவும் ஒன்று சேர்ந்ததும் தாளிப்பு கரண்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மீதமுள்ள ஐந்து வத்தல் மிளகாயை வெட்டிபோட்டு, சிறிதளவு கறிவேப்பிலை தூவி தாளிக்கவும். நன்றாக தாளித்தபின் இறால் வறுவலின் மேல் போடவும். சிறிது நேரம் கழித்து பறிமாறவும்.

 

Leave a Reply

Your email address will not be published.