ஈசி மட்டன் ஃப்ரை

ஈசி மட்டன் ஃப்ரை

 

 

தேவையான அளவு :

 

கறி                     – ¼ கிலோ

மஞ்சள்த்தூள்           – 1 கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 1 கரண்டி

தனியாத்தூள்           – 1 கரண்டி

கரம் மசாலா           – 1 கரண்டி

மிளகுத்தூள்            – 2 கரண்டி

சீரகத்தூள்              – 1 கரண்டி

தயிர்                   – 3 கரண்டி

உப்பு                   – ¼ கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கறியை சுத்தமாக கழுவிய பின் ஒரு பாத்திரத்தில் கறியுடன் மஞ்சள்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, தயிர் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கலந்து 30 நிமிடம் வரை நன்றாக ஊறவிடவும்

 

  1. பிறகு ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலையை போட்டு வதக்கி, இதனுடன் வேக வைத்த கறியையும் சேர்த்து தீயை மிதமாக வைத்து பொறியவிடவும். எண்ணெய் கசிந்து வரும்போது இறக்கிவிடவும். சூடான, சுவையான ஈசி மட்டன் ஃப்ரை பரிமாற தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.