ஈரல் வறுவல்

கோழி சுக்கா

 

தேவையான அளவு :

 

ஆட்டு ஈரல்                            – ½ கிலோ

வெங்காயம்                            – 2

பச்சை மிளகாய்                        – 2

வர மிளகாய்                           – 4

கறிவேப்பிலை                         – 2 கொத்து

பட்டை, பிரியாணி இலை               – தாளிக்க

மிளகு                                  – 1 மேசைக்கரண்டி

எண்ணெய்                              – 3 மேசைக்கரண்டி

மஞ்சள் பொடி                         – 1 தேக்கரண்டி

சீரகம்                                  – 1 தேக்கரண்டி

சோம்பு                                         – 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது                  – 1 தேக்கரண்டி

உப்பு                                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. ஈரலை நன்றாக கழுவிய பின் அதை சின்ன சின்ன துண்டாக வெட்டவும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஈரலுடன் 200 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். ஈரலில் தண்ணீர் முழுவதுமாக சுண்டும் வரை வேக விடவும்.

 

  1. பிறகு ஒரு பாத்திரத்தில் மிளகு, சீரகம், சோம்பு மற்றும் வர மிளகாயை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு மேசைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அம்மியில் விழுதாக அரைக்கவும். அரைத்த மசாலாவில் ஈரலை போட்டு நன்றாக பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

 

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலையை போட்டு தாளிக்கவும். வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, மஞ்சள் பொடி, ஒரு தேக்கரண்டி அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

  1. வதங்கியதும் இதனுடன் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கிய பின் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அடிக்கடி கிளறி விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும். இப்போது சுவையான ஈரல் வறுவல் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.