ஈஸி கோழி வறுவல்

kari pakoda

 

 

தேவையான அளவு :

 

கோழிக்கறி             – ½ கிலோ

பெரிய வெங்காயம்     – 1 கிண்ணம்

தேங்காய் துருவல்      – 1 மேசைக்கரண்டி

தயிர்                   – 1 மேசைக்கரண்டி

சீரகம்                  – 2 தேக்கரண்டி

நல்லெண்ணை         – 10 தேக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கோழித்துண்டுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின் அதை தயிரில், தேவையான உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக ஊறவிடவும். மிக்ஸியில் தேங்காய் துருவல் மற்றும் சீரகத்தை அரைக்கவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.

 

  1. பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்னர்’ ஊற வைத்த கோழியை சேர்த்து நன்றாக கிளறவும்.

 

  1. கடாயை மூடி போட்டு மூடிவிடவும். அடிக்கடி கிளறி விட்டு எண்ணெய் மேலே மிதந்து வந்ததும் இறக்கவும். இப்போது ஈஸி கோழி வறுவல் சாப்பிட தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.