ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

fish fingers

 

தேவையான அளவு :

 

மீன் துண்டுகள்         – 20

எலுமிச்சை     – ½ மூடி

மைதா         – 1 கப்

ரஸ்க் தூள்     – 1 கப்

கார்ன் ப்ளோர் – ¼ கப்

எண்ணெய்      – 8 டேபிள் கரண்டி

உப்பு           – 2 கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. ஒரு பாத்திரத்தில் கழுவிய மீன் துண்டுகளை போட்டு அதில் எலுமிச்சை சாறு, உப்பு அரை கரண்டி சேர்த்து நன்றாக பிரட்டி ஊற வைக்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ப்ளோர் மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பததிற்க்கு கரைக்கவும்.

 

  1. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை கரைத்து வைத்த மாவில் நனைத்தவுடன் ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போடவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு மேலும் ஒரு நிமிடம் வைத்திருந்து நன்றாக பொறித்தெடுக்கவும். சுவையான ஃபிஷ் ஃபிங்கர்ஸ் தயார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.