கறி சுக்கா வறுவல்

chinese chicken

 

 

தேவையான அளவு :

 

கறி                     – 1 கிலோ

காய்ந்த மிளகாய்       – 4

வெங்காயம்             – 2

சீரகத்தூள்              – ½ தேக்கரண்டி

மிளகாய்த்தூள்         – 2 தேக்கரண்டி

தனியாத்தூள்           – 2 தேக்கரண்டி

மஞ்சத்தூள்             – 1 தேக்கரண்டி

கடுகு                   – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை          – 1 கொத்து

எண்ணெய்              – ½ கோப்பை

பூண்டு                  – 1 மேசைக்கரண்டி

இஞ்சி விழுது          – 1 மேசைக்கரண்டி

உப்புத்தூள்             – 1 மேசைக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கறிகளுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் அரைத்தேக்கரண்டி போட்டு ஒரு கப் தண்ணீரை ஊற்றி வேகவிடவும். தண்ணீர் சுண்டும் வரை நன்றாக வேகவிடவும்.

 

  1. பிறகு ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, 2 துண்டு பட்டை சேர்த்து வறுக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

 

  1. இதனுடன் வேகவைத்த கறியை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது, சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு உப்புத்தூளையும் சேர்த்து நன்றாக வறுக்கவும்.பச்சை வாசனை போனதும் நன்றாக கிளறி இறக்கவும்.

 

Leave a Reply

Your email address will not be published.