கார்லிக் சிக்கன் ஃப்ரை

கார்லிக் சிக்கன் ஃப்ரை

 

 

தேவையான அளவு :

 

கோழி                  – 1 கிலோ

பூண்டு                  – 30 பல்

அரிசி மாவு            – 3 மேசைக்கரண்டி

சோள மாவு            – 3 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல்       – 10

சின்ன வெங்காயம்     – 4

தக்காளி                        – 1

சோயா சாஸ்           – 1 தேக்கரண்டி

சர்க்கரை               – 1 தேக்கரண்டி

டார்க் சோயா சாஸ்    – 1 தேக்கரண்டி

எண்ணெய்              – 2 தேக்கரண்டி

எண்ணெய்              – பொறிப்பதற்கு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. கோழித்துண்டுகளை சிறியதாக வெட்டி சுத்தம் செய்யவும். மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், தக்காளி, உப்பு ஆகியவற்றை நன்றாக மிக்சியில் அரைக்கவும். பிறகு சிறிய துண்டுகளாக்கிய கோழியை சோளமாவு, அரிசிமாவு, சோயாசாஸ், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை போட்டு கலந்து இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பூண்டை லேசாக தட்டி வைக்கவும்.

 

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி தட்டிய பூண்டை போட்டு நன்றாக சிவப்பாகும் வரை பொறிக்கவும். அப்படியே அதே எண்ணெயில் கோழி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுக்கவும். அரைத்து வைத்திருக்கும் மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், தக்காளி ,உப்பு ஆகியவற்றை இதனுடன் போடவும். இந்த கலவையை எண்ணெயில் வதக்கி சோயாசாஸ் சேர்க்கவும். டிப்பிங் சாஸு ரெடி.

 

  1. பொறித்த பூண்டு, கோழி துண்டுகளை பரிமாறும் தட்டில் அலங்கரித்து வைத்து டிப்பிங் சாஸுடன் சூடாக பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published.