கூந்தள் ரோஸ்ட்

நாட்டுக்கோழி வறுவல்

 

தேவையான அளவு :

 

கூந்தள் மீன்                    – 1 கிலோ

வெங்காயம்                    – 3

தக்காளி                        – 1

பச்சை மிளகாய்                – 2

கறிவேப்பிலை                  – 2 கொத்து

மஞ்சள் தூள்                   – 1 கரண்டி

மிளகாய்த் தூள்                – 1 கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது          – 1 கரண்டி

சோம்பு                                 – ½ கரண்டி பொடித்தது

உப்பு                           – தேவையான அளவு

எண்ணெய்                      – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மீனை கழுவி தயாராக வைக்கவும். இஞ்சி, பூண்டை அரைக்கவும், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தேவையான அளவு நறுக்கி வைக்கவும். ஒரு குக்கரில் மூன்று கரண்டி எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி & பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

 

  1. அதன்பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ,சோம்பு எல்லாவற்றையும் போட்டு 5 நிமிடம் வதக்கி, நன்றாக சுத்தம் செய்துள்ள கூந்தள் மீனை சேர்க்கவும். பிறகு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்

 

  1. மீன் வெந்திருக்கும் அதிகம் தண்ணீர் காணப்படும். மூடியைத் திறந்து பார்த்து, தண்ணீர் சுண்டி மொரு மொருவென்று வரும் வரை கொதிக்க விடவும். சுமார் 10 நிமிடங்களுக்கு இவ்வாறு தண்ணீரை சுண்ட செய்தால் மிக சுவையான கூந்தள் ரோஸ்ட் தயார்

 

Leave a Reply

Your email address will not be published.