கோகோ சிக்கன்

coco chicken

 

 

தேவையான அளவு :

 

கோழிக்கறி             – ¼ கிலோ

தக்காளி                – 1

வெங்காயம்            – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய்        – 5 (நறுக்கியது)

தேங்காய் பால்                 – 150 மில்லி

பூண்டு பல்             – 10 (நறுக்கியது)

மல்லி கீரை            – ½ கட்டு

மசாலாத்தூள்           – 2 கரண்டி

மிளகாய்த்தூள்         – 2 கரண்டி

மஞ்சள் தூள்           – ¼ கரண்டி

எண்ணெய்              – 5 கரண்டி

பசு நெய்                – 1 கரண்டி

உப்பு                   – ½ கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. கோழிக்கறியை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் போட்டு பொன்னிறமாக தாளிக்கவும். பிறகு பொடிதாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாயை வதக்கவும்.

 

  1. சிறிது வதங்கியதும் சுத்தம் செய்த கறியை போட்டு, அதனுடன் மசலாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக கலக்கவும். பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

 

  1. நன்றாக வெந்ததும் தேங்காய்பாலை ஊற்றவும் பிறகு மல்லிக் கீரையை அறிந்து தூவி நன்றாக கிளறவும். தண்ணீர் சற்று வற்றி கெட்டியானதும் பசு நெய் ஊற்றி பிரட்டியவுடன் இறக்கவும். கோகோ சிக்கன் சாப்பிட தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.