செட்டிநாடு வறுத்த கோழி

chinese chicken

தேவையான பொருட்கள்  :

 

சிக்கன்                         – ½ கிலோ

கறிவேப்பிலை         – 2 கொத்து

பூண்டு                  – 1 முழு பூண்டு

மிளகு                  – 2 தேக்கரண்டி

சோம்பு                         – 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்                – 2

காய்ந்த மிளகாய்       – 5

கடலை மாவு           – 2 கப்

தேங்காய்               – ¼ மூடி

இஞ்சி                  – 50 கிராம்

வெங்காயம்            – 150 கிராம்

தக்காளி                – 100 கிராம்

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. சுத்தம் செய்த கோழி கறியை ஒரு பாத்திரத்தில் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தனியாக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விடாமல் மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை வறுக்கவும். பிறகு அதை ஆற வைத்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

 

  1. மசாலாவை சிக்கனுடன் கலந்து நன்றாக பிசறி ஊற வைக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி, தேவையான உப்பு சேர்த்து மீண்டும் பிசறி 20 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

 

  1. பாத்திரத்தில் கடலை மாவு, மிளகுத்தூள், சிறிதளவு உப்பு, கொஞ்சம் தண்ணீர் தெளித்து கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கலந்துக் கொள்ளவும். தேவையெனில் அரிசி மாவும், ஆப்ப சோடாவும் சேர்க்கலாம்.

 

  1. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த சிக்கனை கடலை மாவில் தேய்த்து போடவும். சிக்கனை மொறு மொறுவென பொன்னிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும். வேற ஒரு கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்

.

  1. வெங்காயம் பொன்னிறமானதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் பொறித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். அலங்கரிக்க மல்லிதலை தூவவும்.

 

Leave a Reply

Your email address will not be published.