சிக்கன் சம்பல்

Pallipalayam chicken

 

தேவையான பொருட்கள் :

 

சிக்கன்                         – ½ கி

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி

கரம் மசாலா           – 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்           – 2 மேசைக்கரண்டி

சர்க்கரை               – 1 மேசைக்கரண்டி

எலுமிச்சை             – 1 சிறியது

காய்ந்த மிளகாய்       – 10

வெங்காயம்            – 2

பச்சை மிளகாய்        – 2

தக்காளி                – 1

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. சிக்கணை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின் தக்காளியை பொடியாக்கவும், வெங்காயத்தை நீளமாகவும் நறுக்கவும். பச்சை மிளகாயை  கீறி வைக்கவும். அம்மியில் காய்ந்த மிளகாயை 10 நிமிடம் வரை தண்ணீரில் ஊறவைத்து நன்றாக அரைக்கவும்.

 

  1. ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள் மற்றும் பாதி உப்பு போட்டு 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிளகாய் விழுதை வதக்கி வைக்கவும்.

 

  1. பிறகு ஊறவைத்த சிக்கனை அரைவேக்காடாக பொறிக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும். தொட்ர்ந்து வதக்கி வைத்துள்ள மிளகாய் விழுதயும் சேர்த்து வதக்கவும்.

 

  1. இதனுடன் கரம் மசாலா சேர்த்து பொறித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும். சுவையான சிக்கன் சம்பல் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.